Cinema History
அந்த மாதிரி காட்ட மாட்டேன்… கங்கை அமரனுக்கும் சில்க் ஸ்மித்தாவிற்கும் இருந்த உறவு!..
தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முக திறன் கொண்டவர் கங்கை அமரன். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி ஆவார். இளையராஜா மிகவும் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு அதிகமான வாய்ப்புகள் வந்தன.
அந்த சமயத்தில் இளையராஜாவிற்கு உறுதுணையாக இருந்தவர் கங்கை அமரன். பல படங்களுக்கே கங்கை அமரன் இசையமைத்து ஆனால் படத்தில் இளையராஜா என பெயர் வந்த சம்பவங்களும் நடந்தன. முதலில் பாடலாசிரியராகதான் கங்கை அமரன் தமிழ் சினிமாவில் இயக்குனரானார்.
ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு அவரது திறமையை வளர்த்துக்கொண்டார். இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக திரைப்படங்களை இயக்க துவங்கினார் கங்கை அமரன். முதன் முதலாக கோழி கூவுது என்கிற படத்தை இயக்கினார். அதில் பிரபு கதாநாயகனாக நடித்தார்.
இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம்:
சில்க் ஸ்மித்தா அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதுக்குறித்து கங்கை அமரன் கூறும்போது, “அந்த படத்திற்கு பிறகு எனக்கும் சில்க் ஸ்மித்தாவிற்கும் நல்ல நட்பு ஏற்பட்டது. சில்க் ஸ்மித்தா அவள் வீட்டிற்கு என்னை சாப்பிட அழைப்பாள்.
அவளது வீட்டிற்கு சென்றால் அங்கு புடவை உடுத்திக்கொண்டு மங்களகரமாக இருப்பாள். உண்மையில் சினிமாவில் காட்டுவது போன்ற ஆள் கிடையாது சில்க். நிஜ வாழ்க்கையில் அவள் மிகவும் அடக்க ஒடுக்கமாக இருப்பாள். அதனால் என்னுடைய எந்த படத்திலும் நான் சில்க் ஸ்மித்தாவை கவர்ச்சியாக காட்டியதே கிடையாது. அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது” எனக் கூறுகிறார் கங்கை அமரன்.
இதையும் படிங்க: பக்கா கிரிமினல் மைண்ட் எம்ஜிஆர்! அந்த சம்பவத்தை எப்படி டீல் பண்ணார் தெரியுமா?