More
Categories: Cinema News latest news

விடுதலை 2 படம் செய்த அந்த மகத்தான சாதனை… எப்படி இதெல்லாம் நடக்குது…? நம்பவே முடியலையே…!

விடுதலை படம் தமிழ் சினிமா உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில் இருந்து தான் நடிகர் சூரியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்க முடிந்தது. இவருக்குள் இப்படி ஒரு நடிகன் உறங்கிக் கிடக்கிறானா என்று பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 2ம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசை அமைத்து வருகிறார்.

அந்த வகையில், இளையராஜாவின் சமீபத்திய சாதனை குறித்து வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இசை என்றாலே இளையராஜா தான். அந்த வகையில் அவரது பாடல்கள் 80ஸ் ஹிட்ஸ்க்கும் சரி, 2 கே கிட்ஸ்சுக்கும் சரி. எல்லாருக்கும் பிடித்தமான விஷயமாகி விட்டது. இசையை நேசிக்கிற எல்லாருக்குமே இளையராஜாவைப் பிடிக்கும்.

Advertising
Advertising

அவரது சமீபத்திய செயல்பாடுகளில் வேணா பலருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். அந்த வகையில் இளையராஜா எல்லா காலத்துலயும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். இப்ப கூட விடுதலை 2 படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் 4 கோடிக்குப் போயிருக்கு.

Ilaiyaraja

எந்த இசை அமைப்பாளருக்கும் போனது இல்ல. அந்த அளவுக்குப் போயிருக்கு. இன்னைக்கு மார்க்கெட்ல இது மிகப்பெரிய விஷயம். 84 வயசுல உள்ள ஒருத்தர் 18 வயசுல உள்ளவங்க கூட போட்டிப் போடுறாரு.இது பெரிய மிராக்கிள் தான். மெடிக்கல் மிராக்கிள்னு சொல்வாங்களே. அப்படித்தான் இதுவும் என்கிறார் அவர்.

தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் குறித்தும் அவர் சில தகவல்களைத் தந்துள்ளார். இளையராஜாவின் பயோபிக்ல தனுஷ் நடித்து வருகிறார். அது இன்னும் தொடங்கவில்லை. தனுஷ் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். அவர் இளையராஜாவாக நடிக்கும்போது அதுக்கு இன்னும் உயிர் வந்துடும். அதுக்கான அடிப்படை வேலைகள் நடக்குது.

இதையும் படிங்க… ராயன் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா? கடும் அதிருப்தியில் தனுஷ்…! நடந்தது இதுதான்..!

பண்ணைபுரம் போய் அந்தப் படத்திற்கு இளையராஜா சந்தித்த நபர்களை எல்லாம் போய் பார்த்து தகவல்களை சேகரிக்கிறாங்க. அது 2 பார்ட்டா வரப்போகுது என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

Published by
ராம் சுதன்

Recent Posts