கமலுக்கு விக்ரமுக்கும் இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கா?.. நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த சீயான்..

by Rohini |   ( Updated:2023-04-28 10:27:35  )
kamal
X

kamal

தமிழ் சினிமாவில் நடிப்பிற்காக தன்னுடைய உடலையும் வருத்தி நடிக்கக் கூடிய நடிகர்கள் என்றால் ஒன்று கமல் இன்னொருவர் விக்ரம். இருவரும் நடிப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள். தமிழ் சினிமாவில் விதவிதமான கெட்டப்களில் நடிக்க கூடிய நடிகர்களும் கமலும் விக்ரமும் மட்டும்தான்.

இருவரின் படங்களை பார்த்தாலே அவர்கள் சினிமாவிற்காக எந்தளவு மெனக்கிடுகிறார்கள் என்பது தெரியும். அந்நியன் படத்தில் விக்ரமின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. அதே போல் தசாவதாரம் , ஆளவந்தான் போன்ற படங்களை எடுத்தால் கமலின் ஆக்ரோஷமான நடிப்பை அறியலாம்.

இந்த நிலையில் விக்ரம் சோழனாக அவதரித்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு, காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் உணர்வு என அனைத்தும் ரசிகர்களை மிகவும் ஈர்த்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாகவே பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன்களில் ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரும் ஒரு டிரிப் போனதும் போல அனைத்து இடங்களுக்கும் சென்று படத்தை மக்களிடம் நன்முறையில் சேர்த்திருக்கின்றனர்.

இந்தப் புரோமோஷனில் தங்களுடைய அனுபவங்களையும் நடிகர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போது விக்ரம் ஒரு ரகசியத்தை பகிர்ந்தார். அதை கேட்டதும் ஜெயம் ரவிக்கும் கார்த்திக்கிற்கும் ஒரே ஆச்சரியம். அதாவது விக்ரம் சேது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அதாவது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாகவே கமல் விக்ரமை சந்தித்தாராம்.

அதாவது பொன்னியின் செல்வன் நாவலை டிவிக்காக எடுக்க இருப்பதாகவும் அதை தானே தயாரிக்க இருப்பதாகவும் மூன்று ரோல்களில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் விக்ரமிடம் கமல் கூறினாராம். ஆனால் டிவி என்றதும் விக்ரம் மறுத்து விட்டாராம். மேலும் பெரிய திரையில் எடுக்கிற மாதிரி இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன், டிவினு சொன்னதால்தான் மறுத்து விட்டேன் என்று விக்ரம் கூறினார்.

இதையும் படிங்க : விஜய்-விஷால் சந்திப்பு பின்னனியில் இவ்ளோ விஷயம் இருக்கா?.. கோடம்பாக்கத்தையே பொறாமை பட வைத்த தளபதிகள்..

இதை கேட்டதும் கார்த்தி ‘இதை இப்பொழுது தான் சொல்கிறார், எங்களுக்கும் இது தெரியாது, எப்போ நடந்தது’ என கார்த்தி விக்ரமிடம் கேட்டார். மேலும் ஜெயம் ரவியும் ‘எந்த கதாபாத்திரத்திற்காக கமல் சார் கேட்டார்’என விக்ரமிடம் மிகவும் ஆச்சரியமாக கேட்டார்.

Next Story