உதவி கேட்டு வந்தவரை நடிகராக்கிய எம்ஜிஆர்! - என்ன ஒரு பண்பு!
சத்யா ஸ்டூடியோவில் ஒரு படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார் எம்ஜிஆர். அப்போது அவரைப் பார்க்க ஒருவர் வந்தாராம். அவரும் ஒரு நடிகர் தானாம். பல படங்களில் சிறு சிறு வேரங்களில் நடித்தவர் அவர் அவர் பெயர் குப்புசாமி.
அவர் தன்னைப் பார்க்க வெகு நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொண்ட எம்ஜிஆர் தன்னுடைய காட்சிகள் முடிந்த பிறகு அவரை உள்ளே வர சொல்லி இருக்கிறார். குப்புசாமி எம்ஜிஆரை வந்து பார்த்தாராம் அப்போது என்ன என்று எம்ஜிஆர் கேட்க தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அதற்கு உங்கள் உதவி வேண்டும் என்றும் கேட்டாராம் குப்புசாமி.
உடனே எம்ஜிஆர் தன் உதவியாளரை அழைத்து குப்புசாமிக்கு தேவையான பணத்தை எடுத்து வரச் சொல்லி குப்புசாமி இடம் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு மறுபடியும் குப்புசாமியை அழைத்த எம்.ஜி.ஆர் புலியூர் சரோஜாவின் கணவரான சீனிவாசனிடம் குப்புசாமியை அறிமுகப்படுத்தி இந்த படத்தில் இவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என்று சொன்னாராம்.
உடனே பட்லர் வேடம் இருப்பதாகவும் அதில் நடிக்கலாம் என்றும் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான ஆடைகளையும் குப்புசாமி இடம் கொடுத்திருக்கிறார். அன்று ஒரு சிலக் காட்சிகளில் நடித்துவிட்டு அன்றைக்கு தேவையான சம்பளமாக 500 ரூபாயையும் சீனிவாசன் குப்புசாமி இடம் கொடுத்திருக்கிறார்.
உடனே எம்ஜிஆர் இந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் சில காட்சிகள் இருக்கின்றது .நாளையும் வந்துவிடு என்று சொல்லி அனுப்பினாராம். மேலும் சீனிவாசனும் குப்புசாமி இடம் மொத்த காட்சிகளையும் நடித்துக் கொடுத்துவிட்டு மொத்தமாக சம்பளத்தைப் பெற்றுக் கொள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்.
இப்படி பல பேருக்கு தன் உதவிகள் மூலம் அவர்களது வாழ்க்கையை வசந்தமாக்கியவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர். அதனாலயே அன்றிலிருந்து இன்று வரை அவரை மறக்காமல் அவரது ரசிகர்களும் சரி இன்றைய இளம் தலைமுறைகளும் சரி அவரை மென்மேலும் போற்றி வந்து கொண்டு இருக்கின்றனர்.