சாமி கும்பிட வந்தா இப்படி ஒரு கேள்வியா கேட்பீங்க? நமீதாவுக்கு ஏற்பட்ட அவமானம்

by Rohini |
namitha
X

namitha

Actress Namitha: தன்னுடைய கவர்ச்சி நடனத்தால் ஒட்டு மொத்த இளசுகளையும் கட்டி போட்டவர் நடிகை நமீதா. எங்கள் அண்ணா என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான நமிதா ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு ஐட்டம் பாடலுக்கு ஆடி தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் குடி பெயர்ந்தார். அனைவரையும் மச்சான் என்று சொல்வதில் இருந்து மேலும் இவர் புகழ்பெற்றார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கு கொண்டு அதன் மூலமும் ரசிகர்களை தன் பக்கம் கவனம் ஈர்த்தார். திருமணமாகி இப்போது அவருக்கு இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ஸ்ருதியிடம் உண்மையை சொன்ன மீனா… பங்ஷனுக்கு வரும் கோபி… திட்டு வாங்கும் தங்கமயில்..

தனக்கு ஏற்ற முக்கியமான கதாபாத்திரம் வந்தால் நடிப்பேன் என சினிமா வாய்ப்புக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் நமீதா. சமீபத்தில் நமீதா அவருடைய கணவருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி ஒரு வீடியோவில் பதிவிட்டு வெளியிட்டு இருக்கிறார்.

பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் நமீதாவிடம் நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்? எந்த வகுப்பை சேர்ந்தவர்? என்றெல்லாம் கேள்விகளை கேட்டதாக அவர் மீது புகார் அளித்திருக்கிறார் நமீதா. நான் இந்து மதத்தை சேர்ந்தவள் .என்னுடைய திருமணம் திருப்பதியில் நடந்தது.

இதையும் படிங்க: டாப் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? பாத்ரூம் வசதியே இல்லாத அறை.. என்ன செய்தார் தெரியுமா?

என் குழந்தைகளுக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். இருந்தாலும் கோவில் நிர்வாகம் என்னிடம் வந்து இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்கின்றனர் .கோவில்களில் இது போன்ற நடவடிக்கைகள் நடப்பது தனக்கு வருத்தமாக உள்ளது என அந்த வீடியோவில் பேசி வெளியிட்டு இருக்கிறார்.

அது மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பல கோவில்களுக்கும் நான் சென்று இருக்கின்றேன். இந்த மாதிரி ஒரு கேள்வியை எந்த கோவில்களிலும் தன்னிடம் இதுவரை கேட்டதில்லை என்றும் மிக வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:அண்ணே எனக்காக பண்ணுங்க ப்ளீஸ்!.. உதயநிதியிடம் கோரிக்கை வைத்த சிம்பு!…

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அமைச்சர் சேகர்பாபுவிடம் இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் நமீதா தெரிவித்திருக்கிறார்.

Next Story