‘துருவநட்சத்திரம்’ படத்தில் சஸ்பென்ஸில் இருக்கும் வில்லன் கதாபாத்திரம்! இது புதுசால இருக்கு

Published On: June 9, 2023
| Posted By : Rohini
vikram

கௌதம் மேனன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக தயாராகி கொண்டு வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம் திரைப்படம். இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா போன்றோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 7 நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன் உட்பட முக்கியமான நடிகர்களும் நடித்திருக்கின்றனர். எல்லா வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில் படம் வெளியாவதில் சிக்கல் இருந்து கொண்டே இருந்தன. மேலும் இந்தப் படத்திற்காக வாங்கப்பட்ட கடனும் வட்டி ஏறி உச்சத்தில் வந்து  நின்றுள்ளது. அதனால் அவற்றையெல்லாம் சரிசெய்தால் தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என்று கூறிவருகின்றனர்.

vikram1
vikram1

ஆனால் கௌதம் மேனன் நான் பார்த்துக் கொள்கிறேன், நான் பேசுகிறேன் என்று ஒரு தைரியமாக இருக்கிறாராம். இதற்கிடையில் இந்தப் படத்தில் ஒரு பெரிய சஸ்பென்ஸை வைத்திருக்கிறாராம் கௌதம். இதற்கு முன்னர் அவர் இயக்கிய என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் ஒரு சஸ்பென்ஸை வைத்திருந்தாராம்.

அதாவது படத்தின் இசையமப்பாளராக ரஹ்மான் மற்றும் ஹரீஸ் ஜெயராஜை போடுங்கள் என்று தனுஷ் சொல்ல ஹரீஸுடன் இருந்த மனக்கசப்பு காரணமாக அவரை போடவில்லையாம். ரஹ்மானையும் போடவில்லையாம். தனுஷ் யார் என்று கேட்க கேட்க பட ரிலீஸ் சமயத்தில் தான் சொல்லியிருக்கிறாராம்.

vikram2
vikram2

அப்படி ஒரு சஸ்பென்ஸை தான் இந்த துருவ நட்சத்திரம் படத்திலும் வைத்திருக்கிறாராம் கௌதம். ஆனால் அது வில்லன் கதாபாத்திரத்தில் வைத்திருக்கிறாராம். அது தற்போது வரை என்ன என்று யாருக்குமே தெரியாதாம். இதுவும் என்ன என்று பட ரிலீஸ் சமயத்தில் தான் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த வயசுல இது தேவையா? உடம்பு தாங்குமா? பதற வைத்த கமல்