More
Categories: Cinema News latest news

செலிபிரேட் பண்ண ரெடியாகுங்க மக்கா… கோட் படத்தின் முக்கிய அறிவிப்பு… கலக்குறீங்களே!..

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கி வரும் டி கிரேட்டர்ஸ் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு அல்வா போல இந்த விஷயம் கிடைத்து இருக்கிறது.

விஜய் நடிப்பில் முதல் சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது கோட். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும்  இப்படத்திற்கு  யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தில் விஜய் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: கோபத்தில் வாட போடா என பாட்டு எழுதிய கண்ணதாசன்!.. சிவாஜிக்கு அமைந்த ஒரு சூப்பர் ஹிட் பாட்டு!..

இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல், எஸ் ஜே சூர்யா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட  ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து இருக்கின்றனர். வில்லனாக மைக் மோகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யின் இரு வேடங்களில் ஒன்று வில்லன் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.

படத்தின் எல்லா பாடல்களும்  இசையமைக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஒரு பாடலில் விஜய் உடன் பிரபுதேவா இணைந்து நடனம் ஆடியிருக்கிறார்.  இருவரும் இணைந்து ஏற்கனவே போக்கிரி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சில நொடிகள் ஆடி இருப்பார்கள். அதுவே மிகப்பெரிய அளவில் லைக்ஸை குறித்தது.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காமல் சிவாஜி நடித்த திரைப்படம்!… நன்றி உணர்ச்சின்னா அது நடிகர் திலகம்தான்!..

கோட் படத்தில் இருவரும் முழு நீள பாடலுக்கு ஆடுவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.  மேலும் நடிகை திரிஷா இப்படத்தின் ஒரு பாடலுக்கு கேமியோ ரோலில் தோன்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அர்ச்சனா கல்பாத்தியுடன்  இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றை  திரிஷா சமீபத்தில் ரிலீஸ் செய்திருந்தார்.

இந்நிலையில் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அடுத்த வாரம் ரிலீஸ் ஆக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெங்கட் பிரபு விரைவில் கோட் குறித்த அப்டேட் அது நிச்சயம் சுவாரசியமாக இருக்கும் என ட்வீட்டி இருந்தார். தற்போது இந்த தகவலால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் வெயிட் செய்து வருகின்றனர்.

Published by
Akhilan

Recent Posts