More
Categories: Cinema History latest news

பேண்டுக்குள் வெடித்த துப்பாக்கி… ரணகளத்திலும் நடிகருக்கு குசும்பு மட்டும் குறையலையே…!

வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தப் பாத்திரம் ஆனாலும் வெளுத்து வாங்கும் நடிகர் தான் அசோகன். எம்ஜிஆர் படங்களில் பிரதான வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். சினிமாவில் தான் அசோகன் பெரிய வில்லன். கொடுமைக்காரன் என்று தெரியும். ஆனால் நிஜத்தில் அப்படி அல்ல. அதற்கு நேர்மாறானவர். தன்மையாகப் பழகக்கூடியவர். உதவி என்று யாராவது கேட்டால் உடனே பண்ணி விடுவாராம். நல்ல மனசுக்காரர். அவரைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவலைப் பார்ப்போம்.

பேண்ட் பாக்கெட்டில்

Advertising
Advertising

‘உண்மையே உன் விலை என்ன’ என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டு இருந்தார். படத்திற்கான சூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. ஒரு காட்சியில் கோட் பாக்கெட்டில் வைக்க வேண்டிய துப்பாக்கியை மறந்து பேண்ட் பாக்கெட்டில் வைத்து விட்டார். சூட்டிங்கில் முத்துராமனைப் பார்த்து அவர் துப்பாக்கியால் சுட வேண்டும்.

வெடித்த துப்பாக்கி

Also read: கவுண்டமணி கூட நடிக்கிறது ரொம்ப கஷ்டம்!.. இப்படி சொல்லிட்டாரே விஜயசாந்தி!…

அதனால் துப்பாக்கியை எடுக்க பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் பேண்டுக்குள் இருந்த துப்பாக்கி வெடித்து விட்டது. அவ்வளவு தான் ஒரே சத்தம். எல்லாரும் என்னாச்சு என பயந்து போயிட்டாங்க. நல்ல நேரம் போல அசோகனுக்கு. அவருக்கு சிறு காயம் தான். தொடையில். அது போலி தோட்டாக்கள் உள்ள துப்பாக்கி. அதனால் வெறும் சத்தம் தான் வந்ததே தவிர பெரிய அளவில் காயம் உண்டாகவில்லை.

அசோகனின் குசும்பு

அப்போதும் அசோகனின் குசும்பு குறையவில்லை. அவர் புலம்பும்போது கூட இப்படித்தான் புலம்பினாராம். என்ன சார்? நல்ல வேளை… துப்பாக்கி தள்ளி வெடிச்சிருச்சு. இல்லைன்னா சாகும்போது கூட அசோகன் அசிங்கமாச் செத்தான்னு செய்தி வந்திருக்குமே சார்…னு அங்கு இருந்தவர்களிடம் வலி இருந்தாலும் தமாஷாகப் புலம்பித் தள்ளினாராம்.

‘சோ’ இயக்கம்

Also read: இன்டர்வியூ கொடுக்காதன்னு மிரட்டல்!… 25 கோடியில 10 கோடி கொடு?!… நயன்தாராவை விளாசிய பயில்வான்…!

1976ல் சோ இயக்கத்தில் வெளியான படம் உண்மையே உன் விலை என்ன? இந்தப் படத்தில் முத்துராமன், பத்மப்பிரியா, அசோகன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். எத்தனை மாந்தருக்கு, காரணத்தை விளக்கவா, பாவம் செய்யுங்கள் ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப் படம் பெங்களூருவில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
sankaran v