தலைக்கணம் அதிகமாயிடுச்சா?!.. கொந்தளித்த பத்திரிக்கையாளர் !.. மன்னிப்பு கேட்ட சரத்குமார்!..

Por thozhil
போர் தொழில் டீமை பார்த்து கொந்தளித்த பத்திரிக்கையாளர் இதுதான் காரணமா..??
கொந்தளித்த பத்திரிக்கையாளர்: போர் தொழில் படம் கடந்த மாதம் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக வளம் வந்தது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாட போர்த் தொழில் டீம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அதில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். மேலும் அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து ஆர்டிஸ்ட்களும் கலந்து கொண்டு தனது பங்களிப்பை செலுத்தினர்.

Por thozhil
இந்த நிலையில் விழா தொடங்கும் முன்பு போர் தொழில் படத்தில் பணியாற்றிய காஸ்ட்யூம் டிசைனர் ஒருவர் பத்திரிக்கையாளர் ஒருவரை கீழே அமரும்படி வலியுறுத்திருக்கிறார். இதனை அடுத்து அந்த பத்திரிகையாளர் மிகுந்த கோபத்துடன் கீழே அமர்ந்திருக்கிறார். இதனை அடுத்து விழா மேடையில் அனைவரும் படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து படத்தை இயக்கிய இயக்குனரிடம் போர் தொழில் டீம் அனைவரும் தலைக்கனம் பிடித்தவர்களா..?? என்று இயக்குனர்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க- முருகதாஸை அசிங்கப்படுத்திய நடிகர்.. வேறு நடிகருக்கு போன வாய்ப்பு.. அட அந்த படமா?!..

Por thozhil
இதற்கு இயக்குனர் ஒன்றும் புரியாமல் ஏன்..??எதற்காக..?? இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார், உடனே உங்கள் படத்தில் பணியாற்றிய காஸ்ட்யூம் டிசைனர் என்னை மிகுந்த அவமானப்படுத்தி கீழே உட்காரும்படி சொல்லி இருக்கிறார் ஏன் நாங்கல்லாம் மேலே உட்கார கூடாதா என்று கோபத்துடன் இயக்குனரை பார்த்து கேள்வி எழுப்பினார். உடனே மேடையில் இருந்த அனைவருக்கும் என்ன இவரு திடீர்னு இப்படி எல்லாரும் முன்னாடியும் இவ்வளவு கோபப்படுகிறார் என்று அதிர்ச்சியானார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நடிகர் சரத்குமார் மேடையில் இருந்து எழுந்து மைக்கை பிடித்து நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அனைவரும் உட்கார்ந்து இருக்கும்போது திடீரென்று எழுந்து இப்படி சொல்வது நியாயம் இல்லை இருந்தாலும் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அவருக்கு பதிலாக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார் சரத்குமார்.

Por thozhil
சரத்குமாரின் இந்த பண்பை பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஒரு பெரிய மனிதன் இப்படி மன்னிப்பு கேட்கிறாரே என்று பத்திரிகையாளரும் வேறு எதுவும் சொல்ல முடியாமல் கீழே அமர்ந்தார்.
இதையும் படிங்க- வயித்துவலினு சொல்லி கூட்டிட்டு போனான்! படப்பிடிப்பில் அஞ்சலியுடன் எஸ்கேப் ஆன நடிகர்