அஞ்சலியின் மயக்கத்தில் ஆட்டம் போட்ட ஹீரோ!..படாத பாடு படுத்திய அந்த நடிகர்!..

Published on: July 9, 2023
Kisu Kisu
---Advertisement---

அஞ்சலியை காதலித்து படாத பாடு படுத்திய அந்த இரண்டெழுத்து நடிகர் பற்றி இந்த நிகழ்வில் பார்ப்போம்.

அந்த இரண்டெழுத்து நடிகர் தன்னுடன் ஜோடியாக நடித்த அஞ்சலியை காதலித்ததை பற்றியும் அந்த அந்த காதல் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் ஆடிய ஆட்டத்தை கண்டு தாங்கள் ஆடிப் போய்விட்டதாகவும் தயாரிப்பாளர் ஒருவர் தனது இன்னல்களை ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். அந்த திரைப்படம் என்னன்னா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அது ஒரு மூன்றெழுத்து திரைப்படம் அந்த திரைப்படத்தில் இவரும் அஞ்சலியும் ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள், படப்பிடிப்பு துவங்கிய போது அனைவருக்கும் தனித்தனி விடுதிகள் கொடுக்கப்பட்டது. அதில் ஹீரோவுக்கும் தனி விடுதி கொடுக்கப்பட்டது. ஹீரோயினுக்கும் தனி அறை கொடுக்கப்பட்டது ஒவ்வொரு அறையின் ஒரு நாள் வாடகை 12000 ஆகும்.

ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த போது ஹீரோ எப்பொழுதும் ஹீரோயின் இருக்கும் அறைக்கு செல்லும் வழக்கம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனால் ஹீரோவுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்ட அறை எப்போதும் மூடி இருந்தது அதனால் இதனைக் கண்ட தயாரிப்பாளர்கள் நாம் தினமும் இந்த அறைக்கு ஒரு நாள் வாடகை மட்டுமே 12000 கொடுத்து வருகிறோம். ஆனால் ஹீரோ எப்பொழுதும் அந்த அறைக்கு செல்வதில்லை இதனால் தேவையில்லாத செலவுதானே என்று தயாரிப்பாளர் நிறுவனம் யோசித்து இதனை ஹீரோவிடம் எப்படி ஆகும் சொல்ல வேண்டும் என்று நினைத்தது.

Anjali
Anjali

பிறகு ஒரு வழியாக ஹீரோவிடம் சென்று நீங்கள் தினமும் உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறையின் தங்குவதில்லை அந்த அறையின் வாடகை ஒரு நாளைக்கு 12000 ரூபாய் ஆதலால் நீங்கள் அந்த அறையில் தாங்காமலேயே தினமும் 12000 கொடுத்து வருகிறோம் படப்பிடிப்பு 30 நாள் நடைபெறும் என்பதால் ஒரு நாளைக்கு 12000 30 நாள் கணக்கு பண்ணி பார்த்தா 3 லட்சத்து 60 ஆயிரம் வரும் அதனால நீங்க அந்த அறையை காலி செய்வீர்களா..?? என்று ஹீரோவிடம் தயாரிப்பாளர் நிறுவனம் கேட்க! இதற்கு ஹீரோ இல்ல முடியாது.. எனக்கு தனியா ஒரு ரூம் எப்பவுமே இருக்கணும். நான் அந்த ரூமை யூஸ் பண்றனோ இல்லையோ அது என் பெயரில் எப்பவுமே இருக்கணும் அப்படின்னு கரராக சொல்லி இருக்கிறார் அந்த இரண்டு எழுத்து நடிகர்.

இதையும் படிங்க- விஜய் வரவே மாட்டேனு சொல்லிட்டாரு! வடிவேலு பட இசைவெளியீட்டு விழாவில் நடந்த களேபரம்

இது மட்டுமல்லாமல் ஒருநாள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் பொழுது அஞ்சலியை வேண்டுமென்றே தனக்கு வயிறு வலி ஏற்பட்டு விட்டதாக பொய் சொல்ல சொல்லி இருக்கிறார். அவரும் தனக்கு வயிறு வலிக்குது என்று நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். அதற்கு நிர்வாகம் சரி வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்று அழைத்திருக்கிறார்கள் ஆனால் அந்த இரண்டெழுத்து நடிகர் வேண்டாம் நானே இவரை ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கிறேன் என்று அவரை அழைத்துக் கொண்டு எங்கே சென்றார் என்று தெரியவில்லை இருவரும் அந்த இடத்திலிருந்து சென்று விட்டார்கள். இந்த நிலையில் ஒருநாள் சூட்டிங் செலவும் மட்டும் இரண்டரை லட்சம் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்த நாள் இருவரும் சூட்டிங்க்கு சென்றிருக்கிறார்கள்.

Anjali
Anjali

இதனை அடுத்து தயாரிப்பாளர் இயக்குனரிடம் அஞ்சலி ஒரு நல்ல ஆர்டிஸ்ட் ஆனால் இந்த ஹீரோவுடன் சேர்ந்து அவரும் கெட்டுப் போய்விட்டார் என்று தெரிவித்திருக்கிறார். ஒரு வழியாக இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த படத்தை நடித்து முடித்து அந்த படமும் வெளியாகி மக்களிடம் நன்கு வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் அஞ்சலி வேறு ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்தார் அந்த படத்தில் இந்த நடிகர் நடிக்கவில்லை இருந்தாலும் அஞ்சலி சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் இடத்திற்கு எல்லாம் சென்று அவருடன் கடலை போட்டு இருக்கிறார். இது மட்டுமல்லாது படத்தின் டைரக்டர் அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்து இருக்கிறார் உடனே அந்த படத்தின் டைரக்டரை நீங்கள் எப்படி அவரின் பெயரை சொல்லி அழைக்கலாம் என்று அவருடன் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார். அஞ்சலியே டைரக்டர் தன்னை பெயர் சொல்லிக் கூப்பிட்டதை பொருட்படுத்தவில்லை ஆனால் இந்த இரண்டெழுத்து நடிகர் ஓவராக நடந்து கொண்டிருக்கிறார்.

மேலும் டைரக்டர் ஒரு காட்சியை அஞ்சலியை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார் அந்த காட்சி சரியாக வரவில்லை என்ற காரணத்தினால் அடுத்தடுத்து மேலும் மேலும் அந்த காட்சியை படப்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனை பார்த்த அந்த இரண்டெழுத்து நடிகர் எதற்காக இப்படி அடுத்தடுத்து ஓயாமல் அவரை தொந்தரவு செய்கிறீர்கள் என்று டைரக்டர் இடம் கேட்டிருக்கிறார் அதற்கு அந்த டைரக்டர் உங்களுக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் நீங்க ஏன்? தேவையில்லாமல் ஆஜர் ஆகிறீர்கள் என்று அவரை பார்த்து கேள்வி கேட்டுள்ளார். உடனே அதற்கு அந்த இரண்டெழுத்து நடிகர் அது என்னுடைய ஆளு நீங்க அவர இப்படி கொடுமைப்படுத்துவது எனக்கு பிடிக்கல அப்படின்னு சொல்லி இருக்கிறார். மேலும் அந்த இரண்டெழுத்து நடிகர் மது அருந்திவிட்டு இயக்குனரிடம் சண்டையிட்டு இருப்பது அஞ்சலிக்கு தெரிய வந்தது இதனை அடுத்து அஞ்சலி சமாதானம் செய்து வைத்திருக்கிறார். பிறகு அஞ்சலி இயக்குனரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.பிறகு அஞ்சலி இவரைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு இவர் நம்முடைய பக்கத்தில் இருந்தால் நம்முடைய கெரியரே க்ளோஸ் ஆயிடும் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு அந்த நடிகருக்கு குட் பாய் சொல்லிவிட்டார்.

Anjali
Anjali

இந்த நிலையில் தற்சமயம் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகையுடன் அந்த இரண்டு எழுத்து நடிகர் சுற்றித் திரிகிறார் இந்த விஷயம் நிறைய வீடியோக்களில் வலம் வரத் தொடங்கின இதனால் அந்த சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகைக்கும் இவரால் பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவரைப் பற்றி நிறைய பேர் அந்த சின்னத்திரை நயன்தாரா அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர் பிறகு அதனை புரிந்து கொண்ட பின் அவரை முற்றிலுமாக தவிர்த்து விட்டு அவரிடம் இருந்து தெளிவாக எஸ்கேப் ஆகிவிட்டார்.

இந்த நிலையில் அந்த இரண்டெழுத்து நடிகருக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் போதிய திரை பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை காரணம் அவரின் தலைக்கணமே அவரை அடுத்தடுத்து வளர விடாமல் அவருக்கு ஒரு முட்டுக்கட்டை போல் அமைந்துள்ளது என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க- கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..

prakash kumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.