மறுபிறவி உண்டா? அதை உணர முடியுமா? நம்பவைக்கிறாள் ஓர் ஹாலிவுட் நடிகை...!
மறுபிறவியை அனைவரும் உணர்ந்து இருக்க மாட்டார்கள். ஏன் பலரும் நம்பக்கூட மாட்டார்கள். ஆனால் இது உண்மை என நம்ப வைக்கிறது ஓர் உண்மைச்சம்பவம். அதுதான் ஒரு நடிகையின் உண்மைக்கதை. நடிகர் ராஜேஷ் இதைப் பற்றி என்ன சொல்கிறார் என பார்க்கலாமா...
லூசில்லே ரிக்சன் 1910 முதல் 1924 வரை மட்டுமே உயிர் வாழ்ந்தார். தனது 14வது வயதில் இறந்தார்.
1998ல் கிறிஸ் - தாரா தம்பதியினருக்கு ஆண்ட்ரியானா மகளாகப் பிறந்தார். இவள் 5வதாக குறைமாசத்தில் பிறக்கிறார். அம்மா குடும்பத்தலைவி. அப்பா மட்டும் சம்பாதிக்கிறார். மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து கவனித்து வருகிறார்கள்.
மருத்துவமனையில் 11 மாதம் வரை இருந்து வருகிறது. அனைவரும் இந்த பிள்ளை பிழைக்காது என்றே நினைத்தனர். அதற்குப் பிறகு ஆண்ட்ரியானாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஒரு அக்கா, 3 அண்ணனகள் இருந்தனர். 5 வயது வரை பேசவே இல்லை. எல்லாமே சைகை தான்.
அம்மாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது. பிள்ளை இன்னும் பேசவே இல்லையே என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் வந்துவிட்டது. இவளோ டிவியில் பழைய படங்கள் போட்டால் மட்டுமே ரசித்துப் பார்க்கிறாள். வெறும் சைலண்ட் மூவியா பார்த்து வருகிறாள். அவங்க என்னென்ன மாதிரி ஸ்டைல் பண்றாங்க...தலைமுடி வைச்சிருக்காங்கன்னு பார்த்து அது மாதிரியே இந்தப் பொண்ணு ஸ்டைல் பண்ணுது.
அந்தக்காலத்துல ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சுருள் சுருளாக நீண்ட தலைமுடிகளை வைத்து இருப்பார்கள். இப்போதும் இன்னும் பழைய படங்களையே பார்க்கிறாளே என அவங்க அம்மாவுக்கு சந்தேகம்.
ஒருநாள் பாத்ரூம் போயிட்டு வந்ததும் பிரமாதமா பழைய படங்களில் உள்ள கதாநாயகி போல ஹேர் ஸ்டைல், அழகாக லிப்ஸ்டிக் போடுகிறாள். இதனால் ஆச்சரியம் அடைந்தாள் தாய். கொஞ்ச நாளில் ஸ்பீச் தெரபியும் கொடுத்துப் பார்த்தார்கள். அப்படி இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சந்தைக்குப் போனால் பழையகாலத்துப் பொருள்களையே வாங்குகிறாள். பழைய படங்களின் டிவிடி, போஸ்டர்கள் வேணும் என மகள் அப்பாவிடம் கேட்கிறாள். அந்தப் பிள்ளை பழைய காலத்தில் நடந்த சில விஷயங்களைச் சொல்லி அந்தப் பொருள்கள் எனக்கு வேணும் என சந்தையில் கேட்கிறது. இது அவரது தாய்க்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஒருமுறை ஒரு விழாவிற்கு 5 வயசு பிள்ளை 50 வயசு பொம்பளை மாதிரி மேக் அப் போட்டு கிளம்புகிறாள். 6வது வயதில் பேச ஆரம்பிக்கிறாள். பெற்றோருக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
தனது 12வது வயதில் ஒரு பேப்பரை எடுத்து அப்பா அம்மாவிடம் ஓடி வருகிறாள். அதில் இருந்த போட்டோவில் லூசியோ ரிக்சன் என்ற நடிகை இருக்கிறாள். அம்மா அம்மா இது தான்மா நான் போன பிறவியில் இருந்தது என்கிறாள். அப்பா அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி.
நான் 5 வயசுலயே நடிக்க ஆரம்பிச்சிட்டேம்மா. நான் 14 வயசுல இறந்துட்டேன்மா. எங்க அம்மா பேரு இங்க் போங். அவர் ஒரு ஸ்டேஜ் ஆர்டிஸ்ட். அம்மா மாரடைப்புல இறந்தாங்க. 2 வாரம் கழிச்சி நான் இறக்குறேன் என தனது போன ஜென்ம நினைவுகளை அப்படியே புட்டு புட்டு வைக்கிறாள்.
பழைய காதலனைப் பற்றி எல்லாம் தந்தையிடம் நினைவு கூர்கிறாள். அவனோ பெண் பைத்தியமாக இருந்தது தெரியவருகிறது. இதை நினைத்து தந்தை மிகவும் வருத்தப்படுகிறார். அற்ப ஆயுளில் இறந்தவர்கள் போட்டோக்களை எல்லாம் தனது அறையில் ஒட்டி வைத்தாள். கடைசியில் மகளை அழைத்துக் கொண்டு போன பிறவியில் இறந்த நடிகை வாழ்ந்த வீட்டுக்கே செல்கின்றனர். அங்கு அவள் விழுந்த இடம்...வாழ்ந்த இடங்களைப் பற்றி அப்படியே சொல்கிறாள்.
அங்கு அவரைப் பற்றி பயோகிராபி எழுதிய ஆளை சந்திக்கிறார்கள். அவர் அவளோட இறப்புச் சான்றிதழைக் காண்பிக்கிறாள். அதைப் பார்த்து ஆச்சரியமாகிறாள். எங்க அம்மாவுக்கு என்னை சினிமாவில் நடிக்க வைத்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அது தான் நடந்தது.
இறந்த சாம்பலை பார்க்க ஆசைப்பட்டு அதைத் தேடி ஒரு கண்ணாடிக்குடுவையில் பாதுகாக்கப்பட்டு இருந்ததைப் பாரக்கிறாள். அதை அவர்கள் அனுமதியுடன் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வருகிறாள். அந்த வீட்டில் தனித்தே செயல்படுகிறாள்.
அவளது ஆசை தற்போது என்னவென்றால் போனபிறவியில் உள்ள பாதிப்புகள் தற்போது என்னென்ன மாற்றங்களை உண்டுபண்ணிக் கொண்டு இருக்கிறது என எழுதப்போகிறேன் என்கிறாள்.