பிளாக் அண்ட் வொயிட் சினிமா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர் நடிப்பில் மட்டுமன்றி அரசியலிலும் ஒரு சிறந்த தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார். அதனால்தான் அவரை மக்கள் திலகம் புரட்சித் தலைவர் என்று மக்கள் அழைத்து வந்தனர்.
பொதுவாக எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களில் பாமர மக்களாகவே நடித்திருப்பார். இதனால் எம்.ஜி.ஆர் பாமர மக்களுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். உதாரணமாக படகு ஓட்டுபவர் ரிக்ஷா ஓட்டுபவர், இப்படியான கதாபாத்திரங்களில்தான் எம்.ஜி.ஆரை நாம் படங்களில் பார்க்க முடியும்.
இதனாலேயே எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்த பொழுது பாமர மக்களின் ஆதரவு எம்.ஜி.ஆருக்கு அதிகமாக இருந்தது. சினிமா நடிகர் நடிகைகளிடம் எம்.ஜி.ஆர் மிகவும் டெரராக இருப்பார் என்று சில பேச்சுக்கள் இருந்தாலும் எம்.ஜி.யாரிடம் நெருக்கமாக பழகியவர்கள் அவரைப் பற்றி கூறும் பொழுது எம்.ஜி.ஆர் மிகவும் ஜாலியான ஒரு மனிதர், அவர் கூட வேலை பார்க்கும் மக்களிடம் சகஜமாக பழகக்கூடியவர் என்று கூறியுள்ளனர்.
அதற்கு சான்றாக ஒரு விஷயமும் நடந்துள்ளது, நடிகை ராஜஸ்ரீ எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களில் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார். அடிமைப்பெண் திரைப்படத்தில் ஒரு சின்னதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆருடன் அவர் நடித்திருப்பார்.
ஓப்பனாக கேட்ட எம்.ஜி.ஆர்:
அடிமைப்பெண் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் திருப்பதிக்கு சென்று இருந்தார் ராஜஸ்ரீ. எனவே பட குழுவிற்காக தனியாக அதிக லட்டுக்களை வாங்கி வந்திருந்தார். பட குழுவில் உள்ள அனைவருக்கும் அவர் லட்டு கொடுத்துக் கொண்டிருந்தார், ஆனால் எம்.ஜி.ஆருக்கு மட்டும் கொடுக்கவே இல்லை.
இதை பார்த்த எம்.ஜி.ஆர் அவரை அழைத்து என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார், அதற்கு ராஜஸ்ரீ நான் அனைவருக்கும் ல்ட்டுகொடுத்து கொண்டிருக்கிறேன் ஏனெனில் இப்பொழுதுதான் திருப்பதிக்கு சென்று வந்தேன் என்று கூறியுள்ளார். அப்படி என்றால் எனக்கு மட்டும் ஏன் லட்டு தரவில்லை என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.
இல்லை உங்களுக்கு லட்டு பிடிக்குமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் ராஜஸ்ரீ. உடனே லட்டு எல்லாருக்குமே பிடிக்கும் எனக்கும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர் அந்த அளவிற்கு எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் எம்.ஜி.ஆர் என கூறப்படுகிறது.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…