அக்காவுக்கு வந்த வாய்ப்பை லாவகமாக கவ்வி பிடித்த ஊர்வசி… அன்னைக்கு மட்டும் அது நடக்கலைன்னா?
1980களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஊர்வசி. மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், “எதிர்ப்புகள்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் தமிழில் பாக்யராஜ் இயக்கி நடித்த “முந்தானை முடிச்சு” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானது குறித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை இப்போது பார்க்கலாம்.
“முந்தானை முடிச்சு” திரைப்படம் உருவாவதற்கு முன்பு இத்திரைப்படத்தில் ஊர்வசியின் மூத்த சகோதரியான கலாரஞ்சினியை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார் பாக்யராஜ். அதன்படி கலாரஞ்சினியை அலுவலகத்திற்கு வரவைத்தார். அப்போது அவருடன் அவரது தங்கையான ஊர்வசியும் வந்திருக்கிறார்.
பாக்யராஜ் ஒரு வசன காகிதத்தை கொடுத்து கலாரஞ்சினியை பேச சொல்லியிருக்கிறார். ஆனால் கேரளாவைச் சேர்ந்த அவரால் தமிழில் அவ்வளவு எளிதாக வசனம் பேசமுடியவில்லை. அப்போது அவருக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஊர்வசி, வசனம் பேசுவதற்கு உதவி செய்தாராம். எனினும் கலாரஞ்சினி மிக விரைவில் தமிழ் கற்றுக்கொள்வார் என்று எண்ணினாராம் பாக்யராஜ்.
அதனை தொடர்ந்து அவரிடம் 85 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அந்த காலகட்டத்தில் மலையாள சினிமாக்களில் 20 நாட்களில் ஒரு படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். 85 நாட்கள் தரமுடியாது என்பதால் அத்திரைப்படத்தில் கலாரஞ்சினி நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதன் பின் அத்திரைப்படத்திற்கு ஷோபனா, அஸ்வினி போன்ற பல நடிகைகளை பாக்யராஜ் அணுகினாராம். ஆனால் யாரும் செட் ஆகவில்லை. அப்போது கலாரஞ்சினியுடன் வந்த அவரது தங்கையான ஊர்வசியின் ஞாபகம் வந்திருக்கிறது.
அவரை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்த பாக்யராஜ், அவரை அலுவலகத்துக்கு வரவழைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்துப்பார்த்தார். அந்த கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக அவர் இருந்தாராம். மேலும் ஊர்வசிக்கு நன்றாகவே தமிழ் தெரிந்திருந்ததாம். இவ்வாறுதான் “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் ஊர்வசி கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் பத்து படங்களுக்கு ஒப்பந்தமான ஜெமினி பட நடிகை… யார்ன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!