பட விழாவில் விமல் சரக்கடிச்சிட்டு வந்தாரா?.- விளக்கம் கொடுத்த பத்திரிக்கையாளர்!..

நடிகர் விமல், சூரி, சிவகார்த்திகேயன் மூவருமே ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த நடிகர்கள். அதிலும் சூரியும், விமலும் அவர்களது கிராமத்து சாயல் பேச்சால் மிகவும் பிரபலமடைந்தனர். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், விமல் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள்.

அந்த காலக்கட்டத்தில் சிவகார்த்திகேயனை விட விமல் பிரபலமாக இருந்தார். அதற்கு முன்பு அவர் நடித்த களவாணி திரைப்படமே அதற்கு காரணமாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு விமல் மீது நிறைய குற்றச்சாட்டுகள் வந்தது. அவர் பட விழா, ப்ரெஸ் மீட்டிங் என எதற்கு வந்தாலும் மது அருந்திவிட்டு வருவதாக கூறப்பட்டது.

இதுக்குறித்து பத்திரிக்கையாளர் செய்யார் பாலு கூறும்போது, விமல் மது அருந்திவிட்டு நிகழ்ச்சிகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் பெரும் நடிகராக வளர்ந்து வந்த நடிகர் ஒருவர் வரிசையாக தோல்வியை காணும்போது அவர் மனநிலை எப்படி இருக்கும் என யோசிக்க வேண்டும்.

முதலில் வாகை சூடவா, களவாணி போன்ற வெற்றி படங்களாக கொடுத்து வந்த விமலுக்கு பிறகு வரிசையாக படங்கள் தோல்வி அடைய துவங்கின. விமல் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு சினிமா பெரும் கனவாக இருந்தது.

மன உளைச்சலுக்கு உள்ளான விமல்:

ஆனால் சினிமாவில் தொடர்ந்து அவர் கண்ட தோல்வி, மக்களிடம் இருந்து பெற்ற விமர்சனங்கள் அவரை சோர்வடைய வைத்துவிட்டன. உதாரணமாக இஷ்டம் திரைப்படத்தில் அவர் பேசிய ஆங்கில பாணியானது மிகவும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆங்கிலத்தை நன்றாக பேசும் அளவிற்கு பெரிதாக படிக்கவில்லை விமல்.

இதனால் ஏற்பட்ட விரக்தியால்தான் விமல் மதுவிற்கு அடிமையானார். அப்போதும் கூட அவர் எந்த தவறான வார்த்தைகளையும் பேட்டிகளில் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார் செய்யார் பாலு.

Related Articles
Next Story
Share it