படப்பெட்டியை கொளுத்த நினைத்த கலைஞர்!.. புத்திசாலித்தனமாக முறியடித்த மக்கள் திலகம்!..

Kalaignar, MGR
உலகம் சுற்றும் வாலிபன் படம் தற்போது ரீரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. ஆனால் இந்தப் படம் முதன் முதலாக வெளியாவதற்கு முன் இந்தப் படம் ரிலீஸாகாது. அப்படி வந்தால் சேலை கட்டிக்கொள்கிறேன். வளையல் போட்டுக் கொள்கிறேன் என்றாராம் ஒரு பிரபலம். அது யார், என்ன நடந்தது என்பது குறித்து முன்னாள் காவல்துறை அதிகாரியும், அட்வகேட்டுமான ஆர்.வரதராஜன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா...
எம்ஜிஆர் தனியாக அதிமுக ஆரம்பித்த போது எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் மிகப்பெரிய மோதல் இருந்தது. 72ல் திமுகவில் இருந்து விலகி கட்சி ஆரம்பித்தார். திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார் எம்ஜிஆர். அந்த நேரம் 73, 74ல் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசுக்கு தயாரானது. இந்தப் படம் ரிலீஸானால் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய செல்வாக்கு கிடைத்து விடும். அதனால் அதை ரிலீஸாக விடாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி அந்தப் படம் கலர் பிராசஸிங்குக்குக் கொண்டு வரும்போது நெகடிவ் ரோலைக் கொளுத்திவிடுவது என திட்டம் தீட்டினாராம். அடுத்து நடந்தது என்ன? வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க... இயக்குனருக்காக இப்படியா விட்டுக்கொடுப்பீங்க… ரஜினியின் பெருந்தன்மைக்கு யாரும் வரமாட்டங்கப்பா!
1969ல் கலைஞர் முதல்வராக இருந்தார். 1970ல் ஜப்பானில் எக்ஸ்போ 70 என்ற மிகப்பெரிய பொருட்காட்சி நடத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்றது. இந்த பொருட்காட்சியை தமிழக மக்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு படத்தை எடுக்க நினைத்தார். அதற்காக எடுக்கப்பட்ட படம் தான் உலகம் சுற்றும் வாலிபன். அந்தப் படம் மக்கள் மத்தியில் வந்தால் எம்ஜிஆருக்குப் பெரிய அளவில் பெயர் கிடைத்துவிடும். அதனால் அந்தப் படத்திற்கான நெகடிவ் ரோலைக் கொளுத்தி விட வேண்டும் என்று திட்டம் போட்டாராம் கலைஞர்.
அவரது மிகப்பெரிய வீக்னஸ் என்னன்னா அவரால் ரகசியம் காப்பாற்ற முடியாது. கூட இருப்பவர்களிடமும் சொல்லிவிடுவராம். அது திமுகவைச் சேர்ந்த மதுரை முத்து என்பவரிடம் சொல்லப்பட்டதாம். அவரும் பொதுக்கூட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸாகாது. அப்படி வெளியானால் நான் சேலையைக் கட்டிக்கிறேன். வளையல் போட்டுக்கறேன் என்றார். அப்போது அனைவர் மத்தியிலும் இது பரபரப்பாகப் பேசப்பட்டது. உலகம் சுற்றும் வாலிபன் படம் வருமா, வராதா என்பது தான் பேச்சு.
ஆனால் இடையில் படத்தின் ரிலீஸ் தேதியையும், தியேட்டர்களையும் அறிவித்து விட்டார்கள். இது மதுரை முத்துக்கு பேரதிர்ச்சி. ஆனால் எம்ஜிஆர் ரகசியமாக படத்திற்கான கலர் பிராசஸிங் வேலைகளை மும்பையில் சென்று முடித்துவிட்டாராம். படம் எங்கு ரிலீஸாகாதுன்னு சொன்னார்களோ, அதே மதுரையில் தான் முதல் காட்சியை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று எம்ஜிஆர் திட்டமிட்டாராம்.

Ulagam sutrum valiban
அதன்படி, மதுரையில் முதன் முதலாக காலை 8 மணிக்கு சிறப்பு காட்சி. அதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு 10 ஸ்டண்ட் மாஸ்டர்கள் உதவியுடன் படப்பெட்டி மதுரை வந்தது. அதன்படி முதல் காட்சி மதுரை மீனாட்சி தியேட்டரில் போடப்பட்டது. அதற்கேற்ப அதிமுக கொடியை படத்தில் காட்டி நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என்று ஓபனிங் சாங் போடப்பட்டதாம்.
அதே போல சென்னை தேவி பாரடைஸ் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளில் ரிலீஸாகி 216 நாள்கள் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்ததாம். இது எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அரசியல் திருப்புமுனையாக அமைந்ததாம். இந்தப் படம் ரிலீஸானதும் மதுரை முத்துவுக்கு ரசிகர்கள் 2 மாதமாக சேலையும், வளையலுமாக பார்சல் அனுப்பினார்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.