எப்பா ரசிகர்களே எந்த முடிவும் எடுத்துடாதீங்க!.. இந்தாங்க STR 48 அப்டேட்.. அட அவரே சொல்லிட்டாரே!..

by Rohini |
simbu
X

simbu

STR 48: ஒரு பக்கம் ரஜினி, ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் அஜித், விஜய் , சூர்யா என தங்கள் படங்களுக்காக தயாராகிக் கொண்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட 8 மாதங்களை கடந்தும் இன்னும் சிம்புவின் தரப்பில் இருந்து எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது.

ஒரு கட்டத்தில் வெறுப்புக்கு ஆளான சிம்பு ரசிகர்கள் தங்கள் இணையதள பக்கத்தில் ‘எங்கள் மன வலி உனக்கு புரியாது தலைவா! இதுக்கு மேல எங்களால் முட்டுக் கட்டை போட முடியாது. அதனால் நாங்கள் இந்த பதிவில் இருந்து வெளி நடப்பு செய்கிறோம். நீ நல்லா இரு தலைவா!’ என சிம்புவுக்காக உருகினார்கள்.

இதையும் படிங்க: தளபதிக்கு பின்னர் மீண்டும்.. லோகேஷின் பக்கா ஸ்கெட்ச்… ஓகே சொல்வாரா ரஜினிகாந்த்..?

ஏனெனில் இதுவரை எந்தவொரு அப்டேட்டும் கொடுக்காத சிம்புவுக்காக இனிமேலும் நாங்கள் ஏமாற போவதில்லை என்று மறைமுகமாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்புவின் புதிய படத்திற்கான அப்டேட்டை சமீபத்தில் அறிவித்தார்.

அதாவது ரஜினிக்காக எழுதப்பட்ட கதைதானாம் இது. சிம்பு இந்த ப்ராஜக்டிற்குள் வந்த பிறகும் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லையாம். ஏனெனில் ரஜினியின் சில குறிப்பிட்ட மானரிசம்கள் சிம்புவிடமும் இருப்பதால் கதையில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லையாம்.

இதையும் படிங்க: பராசக்தி படத்துக்கு வந்த பஞ்சாயத்து… கலங்கிய நடிகர் திலகம்!.. கடைசியில் நடந்தது இதுதான்!..

மேலும் இந்தப் படம் ஒரு வரலாற்றுப் பின்னணியில் தான் உருவாக இருக்கிறதாம். முந்தைய கால வரலாறு என இயக்குனர் கூறினார். அதற்காகத்தான் சமீபத்தில் சிம்பு வெளியிட்ட லுக்கையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்னும் அது எங்களுக்கு போதாது.

அவர் லுக்கில் நிறைய தேவைப்படுகிறது. அதனால்தான் வெளி நாட்டில் இருந்து அதற்கான வேலையில் சிம்பு இருப்பதாக இயக்குனர் கூறினார். அதெல்லாம் ஓரளவு செட்டான பிறகுதான் ப்ரோமோ, டைட்டில் வீடியோ எல்லாம் வெளியிடப்படும் என தேசிங்கு பெரியசாமி கூறினார்.

இதையும் படிங்க: லியோ விழாவுக்கு எஸ்.ஏ.சி வராததற்கு இதுதான் காரணமா?!.. அப்போ போட்டோ வெறும் விளம்பரமா?..

Next Story