கமல் படத்தை இயக்க மறுத்த முன்னணி இயக்குனர்கள்… ஆனா கோடிகளை அள்ளி சாதனை!

Published on: November 16, 2024
Kamal
---Advertisement---

வணிக ரீதியாக கமர்ஷியல் இயக்குனர் என பெயர் பெற்றவர் கே.எஸ்.ரவிக்குமார். இவரது படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் தான். விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். காமெடி, த்ரில்லர் படங்கள் இவருடைய டிரேடு மார்க்.

இவர் ரஜினியை வைத்து முத்து, படையப்பா ஆகிய படங்களை இயக்கியவர். கமலை வைத்து அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களை இயக்கியுள்ளார்.

Also read: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

தசாவதாரம் படம் சிறப்பானது. எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை உண்டாக்காது. இந்தப் படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. தமிழில் முதன் முதலாக 200 கோடியை வசூலித்த படம் தசாவதாரம். இது மிகப்பெரிய சாதனை. அதுவும் 2004ல்.

தசாவதாரம்

1 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் 8 கோடியே 44 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய். ஆனால் 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. அதுவும் படம் வெளியான நாலே வாரத்தில். கிட்டத்தட்ட 135 கோடியை வசூலித்துள்ளது. 2004ல் தசாவதாரம் படம் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய வசூல்

அந்தக் காலத்தில் அதாவது 20 வருடங்களுக்கு முன் இது மிகப்பெரிய தொகை. ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கான கதையை பல முன்னணி இயக்குனர்களிடம் கமல் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர்கள் அந்தக் கதையைப் புரிந்து கொள்ள முடியாமல் மறுத்து விட்டார்களாம்.

10 கெட்டப்

dasavatharam
dasavatharam

கமலுடன் காமெடிப் படங்களில் மட்டுமே பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்திற்காக வருடக்கணக்கில் கடின உழைப்பைப் போட்டு இயக்க முன்வந்தார். இது கமலுக்கே ஆச்சரியத்தை உண்டாக்கியது.

ரவிக்குமாருக்கு இந்தக் கதையைக் கேட்டதுமே கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உண்டாகி விட்டது. 10 கெட்டப்பில் கமல் கலக்குவார். 21 நாள்கள் அமெரிக்காவில் முகாம்.

11வது அவதாரம்

Also read: Kanguva: கங்குவா ஒண்ணுக்கே இன்னும் விடை தெரியல… கங்குவா 2க்குத் தயாரான இயக்குனர்

அவருக்கு மேக்கப் போட்டவர் மைக்கேல் வெஸ்ட்மோர். அவரைக் கமல் 11வது அவதாரம் என்று பாராட்டி உள்ளாராம். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் மேக்கப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரித்தவர் வி. ரவிச்சந்திரன். ஹிமேஷ் ரேஷ்மியாவும், தேவிஸ்ரீ பிரசாத்தும் இணைந்து இசை அமைத்துள்ளனர். படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.