Connect with us

Cinema News

லெஜண்ட் அண்ணாச்சியின் 5 மொழி ஆட்டம்.! மண்வாசனை வீசியதா.? மண்ணை கவ்வியதா.?!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் அண்ணாச்சியை தெரியாத ஆளே இருக்க முடியாது அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். தொடர்ந்து தனது கடைகளின் விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “தி லெஜெண்ட்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி , மலையாளம் என 5 மொழிகளில் திரையரங்கில் வெளியானது.

இந்நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம்:

படத்தின் கதைக்களம் :

படத்தில் அருள் அண்ணாச்சி உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி இருந்து பல சாதனைகளை செய்து விட்டு, தன்னுடைய சொந்த ஊருக்கு எதாவது நல்லது செய்யவேண்டும் என ஆசையுடன் வருகிறார். ஊருக்கு வந்த இவர், தன்னுடன் படித்துக்கொண்டிருந்த நண்பர் ரோபோ சங்கரை பார்க்கிறார்.

இதையும் படியுங்களேன்- அந்த கூட்டத்திலும் அஜித் செய்த நெகிழ்ச்சி சம்பவம்… கண்கலங்கிய தாயார்… வைரல் வீடியோ இதோ…

ரோபோ சங்கருக்கும் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்ததிலிருந்து சர்க்கரை வியாதி இருந்தது தெரியவருகிறது. இதனால் சர்க்கரை வியாதியால் குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருக்க ஒரு கட்டத்தில் திடீரென ரோபோ சங்கர் இறந்து விடுகிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடையும் சரவணன் இனி இந்த ஊரில் எந்த ஒரு குழந்தையும் சர்க்கரை நோயால் அவதிப்படக்கூடாது அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கிறார்.இதில் அவர் வெற்றிபெறுகிறா..? இல்லையா என்பது தான் கதைக்களம்.

விமர்சனம்:

படத்தை பார்த்த பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகிறார்கள். ஏனெனில், அண்ணாச்சிக்கு இது முதல் படம் என்பதால் அவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிதாக இல்லை. ஆனால் அவரை தவிர மறைந்த நடிகர் விவேக் கதாபாத்திரம், நடிகர் பிரபு, யோகி பாபு என பலர் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றே கூறலாம்.

படத்தின் இன்னோர் சறுக்கல், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் தான், மொத்தமாக 6 பாடல்கள். அது பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்கிறது. அடுத்து படத்தின் எடிட்டிங், அதுவும் கொஞ்சம் சுமார் தான்என்கிற விமர்சனம் எழுகிறது. படத்தின் பிளஸ் படத்தின் ஒளிப்பதிவு. படத்திற்கான செலவை அப்படியே கண்முன்னே பிரமாண்டமாக காட்டுகிறது.

மொத்தத்தில் ஒரு ஸ்பூஃப் திரைப்படம் (மிர்ச்சி சிவாவின் தமிழ்ப்படம் பாணியில்) போல் தி லெஜண்ட் அமைந்துள்ளளது என்ற கருத்துக்கள் தான் பார்வையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top