தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு படி மேல் போய் ஒரு சில நடிகைகள் வாள்வீச்சையும் கூட கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தனர்.
தமிழை உச்சரிப்பதில் திறமையான நடிகை யார் என்றால் அது பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி தான். இவருக்கு வயது 88. அனல் பறக்கும் வசனங்கள் பக்கம் பக்கமாக இருந்தாலும் சர்வ சாதாரணமாகப் பேசி அசத்தி விடுவார். முக்கியமான இயக்குனர்களின் முதல் படங்களில் இவர் தவறாமல் நடித்து விடுவார். அந்த வகையில், ஸ்ரீதரின் முதல் படமான கல்யாணப்பரிசு படத்தில் இவரது நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும். அதே போல கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படம் சாரதா. பி.மாதவனின் முதல் படம் மணியோசை. மல்லியம் ராஜகோபாலுக்கு முதல் படம் ஜீவனாம்சம்.
அந்தக் காலகட்டத்தில் ஜெமினிகணேசன், சாவித்திரி ஜோடிக்கு இணையாகப் பேசப்பட்டவர்கள் யார் என்றால் அது எஸ்எஸ்ஆரும், விஜயகுமாரியும் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். என்ன காரணம் என்று தெரியவில்லை. இவர்களது மணவாழ்க்கை சிறிது காலத்தில் கசந்து பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் தான் பிரிய நேர்ந்ததாக அண்ணாவிடம் விஜயகுமாரி சொன்னாராம். எஸ்எஸ்ஆரும் பிரிந்ததும் தாமரை செல்வி என்று ஒரு பெண்ணை மணந்து விட்டார்.
இதையும் படிங்க… குமரிமுத்துவை கண்ணீர் விடச் செய்த சின்னக் கலைவாணர் விவேக்… அப்படி என்னதான் நடந்தது?..
அந்தவகையில் பார்க்கப்போனால் அவருக்கு இது 3வது மனைவியாம். இதற்கு முன்னால் தேனாம்பேட்டை வீட்டில் முதல் மாடியில் பங்கஜமும், 2வது மாடியில் விஜயகுமாரியும் வசித்து வந்தார்களாம். அப்போதே இரு குடும்பமும் அந்த அளவுக்கு ஒற்றுமையாக வசித்து வந்தார்களாம். எஸ்.எஸ்.ராஜேந்திரன் இலட்சிய நடிகர் என்றால் விஜயகுமாரி லட்சிய நடிகை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வளவு போராட்டங்களையும் சந்தித்தவர் இவர். எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தமிழை அவ்வளவு அழகாக உச்சரிப்பார். . எஸ்.எஸ்.ராஜேந்திரன் – விஜயகுமாரி தம்பதியினருக்கு ரவிக்குமார் என்ற மகன் பிறந்தான். இவர்களது திருமணம் ரகசியமாக நடந்ததாம். சில ஆண்டுகள் கழித்து தான் வெளியே தெரிந்ததாம்.
கங்குவா படத்தின்…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…