More
Categories: Cinema News latest news

நாவல்களில் இருந்து படமாக்கப்பட்டு மாஸ் ஹிட் ஆன படைப்புகள்… ஒரு பார்வை…

தமிழ் சினிமா தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே பல திரைப்படங்கள், பல நாவல்களை தழுவி படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கல்கி எழுதிய “தியாக பூமி”, கள்வனின் காதலி”, “பார்த்திபன் கனவு”, “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்கள் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Ponniyin Selvan Part 1

இயக்குனர் வெற்றிமாறன் “லாக்கப்”, “வெக்கை”, போன்ற நாவல்களை படமாக்கியுள்ளார். தற்போது ஜெயமோகனின் “துணைவன்” என்ற சிறுகதையை “விடுதலை” என்ற பெயரில் படமாக்கியுள்ளார். அதே போல் சி.சு.செல்லப்பா எழுதிய “வாடிவாசல்” நாவலை வெற்றிமாறன் அதே பெயரில் படமாக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Viduthalai

மேலும் சுதா கொங்கரா இயக்கிய “சூரரை போற்று” என்ற திரைப்படம் கூட ஜி.ஆர்.கோபிநாத் எழுதிய சுயசரிதையான “சிம்ப்ளி பிளை: ஏ டெக்கான் ஒடிஸி” என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் நாவல்களை அடிப்படையாக வைத்து நாம் பலரும் அறியாத பல குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவ்வாறு நாவல்களில் இருந்து தழுவி எடுக்கப்பட்டு நம் மனங்களை கொள்ளைக்கொண்ட சில திரைப்படங்களை குறித்து நாம் பார்க்கலாம்.

Mullum Malarum

1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, ஜெயலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முள்ளும் மலரும்”. மகேந்திரன் இயக்கிய இத்திரைப்படம் இப்போதும் ஒரு கல்ட் சினிமாவாக போற்றப்படுகிறது. இத்திரைப்படம் உமா சந்திரன் என்பவர் எழுதிய “முள்ளும் மலரும்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

Iyarkai

கடந்த 2003 ஆம் ஆண்டு எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “இயற்கை”. இதில் ஷாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகிய பலரும் நடித்திருந்தனர். 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் “இயற்கை”. எப்போதும் ரசிகர்களின் மனதில் ஒரு பசுமையான உணர்வுகளை கிளப்புகிற திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது.

Vennira Iravugal

இவ்வாறு நமது மனதில் நீங்கா இடம்பிடித்த “இயற்கை” திரைப்படம் ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய “வொயிட் நைட்ஸ்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த நாவல் “வெண்ணிற இரவுகள்” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pithamagan

கடந்த 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பிதாமகன்”. இதில் சூர்யா, சீயான் விக்ரம், சங்கீதா, லைலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பாலா இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்த திரைப்படமாகும்.

Jayakanthan

இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டதாகும். சமூகத்தில் மிகவும் அடிமட்ட அளவில் வாழ்க்கை நடத்துகிற வெட்டியான் கதாப்பாத்திரத்தை நம் கண்முன் கொண்டு வந்திருந்தார் பாலா. இத்திரைப்படம் இப்போதும் பேசப்பட்டு வருகிற படைப்பாக திகழ்ந்து வருகிறது.

Naan Kadavul

அதே போல் கடந்த 2009 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளிவந்த “நான் கடவுள்” திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நம் நினவை விட்டு நீங்காத ஒரு திரைப்படமாகும். இதில் யாசகம் கேட்டு பிழைப்பவர்களின் வாழ்க்கையை மிகவும் யதார்த்தமாக படமாக்கியிருந்தார் பாலா.

Ezhaam Ulagam

இந்த நிலையில் இத்திரைப்படம் ஜெயமோகன் எழுதிய “ஏழாம் உலகம்” என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாரிசு படத்தில் இவ்வளவு கிராபிக்ஸ் பண்ணதுக்கு இதுதான் காரணம்?… ஓப்பனாக போட்டுடைத்த பிரபல  படத்தொகுப்பாளர்…

Published by
Arun Prasad

Recent Posts