சிவாஜி கணேசனுக்கு இத்தனை படங்கள் ஒரே நாளில் வெளிவந்தனவா?? அடேங்கப்பா லிஸ்ட்டு பெருசா போகுதே!!

Sivaji Ganesan
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், நடிப்புக்கே பல்கலைக்கழகமாக விளங்கியவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.

Sivaji Ganesan
இந்த நிலையில் சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு சாதனையை செய்துள்ளார். அதாவது சிவாஜி கணேசன் நடித்த இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளன. அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல, பலமுறை வெளிவந்துள்ளது அவ்வாறு எந்தெந்த தேதிகளில் என்னென்ன திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவந்தன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
- அந்த நாள்-கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

Antha Naal and Kalyanam Panniyum Brahmachari
“அந்த நாள்”, “கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 13 ஏப்ரல் 1954 ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களிலுமே சிவாஜி கணேசன்தான் ஹீரோ. இதில் “அந்த நாள்” திரைப்படம் காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படமாக அமைந்தது.
2. கூண்டுக்கிளி-தூக்கு தூக்கி

Koondukkili and ThookkuThookki
“கூண்டுக்கிளி”, “தூக்கு தூக்கி” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 26 ஆகஸ்து 1954 ஆம் ஆண்டு வெளியானது. இதில் “கூண்டுக்கிளி” திரைப்படம் எம்.ஜி.ஆர்-சிவாஜி கணேசன் ஆகியோர் இணைந்து நடித்த ஒரே திரைப்படமாகும்.
3. கோடீஸ்வரன்-கள்வனின் காதலி

Kalvanin kadhali and Kodeeswaran
“கோடீஸ்வரன்”, “கள்வனின் காதலி” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1955 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டிலுமே சிவாஜி கணேசன்தான் ஹீரோ.
4. நல்ல வீடு-நான் பெற்ற செல்வம்

Nalla Veedu and Naan Petra Selvam
“நல்ல வீடு”, “நான் பெற்ற செல்வம்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1956 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது.
5. பெற்ற மனம்-பாவை விளக்கு

Petra Manam and Paavai Vilakku
“பெற்ற மனம்”, “பாவை விளக்கு” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
6. ஸ்ரீ வள்ளி-எல்லாம் உனக்காக

Sri Valli and Ellam Unakkaga
“ஸ்ரீ வள்ளி”, “எல்லாம் உனக்காக” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களிலும் சிவாஜி கணேசன்தான் ஹீரோ.
7. நவராத்திரி-முரடன் முத்து

Navarathiri and Muradan Muthu
“நவராத்திரி”, “முரடன் முத்து” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வெளியானது. இதில் “நவராத்திரி” படத்தில் சிவாஜி கணேசன் 9 கெட்டப்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. இரு மலர்கள்-ஊட்டி வரை உறவு

Iru Malargal and Ooty Varai Uravu
“இரு மலர்கள்”, “ஊட்டி வரை உறவு” ஆகிய இரண்டு படங்களுமே 1967 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன.
9. சொர்க்கம்-எங்கிருந்தோ வந்தாள்

Sorgam and Engiruntho Vandhaal
“சொர்க்கம்”, “எங்கிருந்தோ வந்தாள்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது.
10. சுமதி என் சுந்தரி-பிராப்தம்

Sumathi En Sundhari and Praptham
“சுமதி என் சுந்தரி”, “பிராப்தம்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது. இதில் “பிராப்தம்” திரைப்படத்தை பழம்பெரும் நடிகையான சாவித்திரி இயக்கியிருந்தார்.
11. வைர நெஞ்சம்-டாக்டர் சிவா

Vaira Nenjam and Doctor Siva
“வைர நெஞ்சம்”, “டாக்டர் சிவா” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியானது.
12. பரிட்சைக்கு நேரமாச்சி-ஊரும் உறவும்

Paritchaikku Neramatchi and Oorum Uravum
“பரிட்சைக்கு நேரமாச்சி”, “ஊரும் உறவும்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி ஒரே நாளில் வெளியானது.
13. தாவணி கனவுகள்-இரு மேதைகள்

Dhavani Kanavugal and Iru Medhaigal
“தாவணி கனவுகள்”, “இரு மேதைகள்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியானது. இதில் “தாவணி கனவுகள்” திரைப்படத்தில் பாக்யராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். அதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.
14. ஜல்லிக்கட்டு-கிருஷ்ணன் வந்தான்

Jallikattu and Krishnan Vandhaan
“ஜல்லிக்கட்டு”, “கிருஷ்ணன் வந்தான்” ஆகிய இரண்டு திரைப்படங்களுமே 1987 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 28 ஆம் தேதி வெளியானது. இதில் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தில் சத்யராஜ் ஹீரோவாக நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக சிவாஜி கணேசன் நடித்திருந்தார்.