மனோஜின் காதலுக்கு விலை 2 கோடி!... அப்படி என்ன நடந்தது?!.. ஒரு பிளாஷ்பேக்!..

by Rohini |
mano
X

mano

இன்று தமிழ் திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு. இயக்குனர் இமயமாக 70களில் சினிமாவில் ஒரு அச்சாணியை பதித்தவர் பாரதிராஜா. அதுவரை கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் சினிமாவில் வந்து சாதிக்க முடியுமா என்ற ஒரு சந்தேகம் இருந்தது .அதை உடைத்தெறிந்தவர் பாரதிராஜா. சாதாரண ஒரு கிராமத்திலிருந்து வந்து சினிமாவில் தடம்பதித்து இன்று ஒரு இயக்குனர் இமயமாக உயர்ந்திருக்கிறார் பாரதிராஜா.

எத்தனையோ ஹீரோ ஹீரோயின்களை உருவாக்கியவர் தன் மகனை ஒரு நல்ல நிலைமைக்கு இவரால் கொண்டுவர முடியவில்லை .அது பாரதிராஜாவுக்கும் வருத்தம் இருக்கிறது .அவருடைய மகன் மனோஜுக்கும் அந்த வலி இருந்தது. தன் அப்பாவைப் போல நம்மால் ஒரு பெரிய இடத்தை அடைய முடியவில்லை என்ற ஒரு அழுத்தமே அவருடைய இந்த நிலைமைக்கு காரணம் என்று சொல்லலாம்.

பல பேட்டிகளில் பார்க்கும் பொழுது எப்பொழுதுமே பாரதிராஜாவின் சாதனைகளையும் அவரை மாதிரி என்னால் வர முடியவில்லை என்ற தன் வேதனையையுமே அவர் பகிர்ந்திருக்கிறார். இப்படி மன அழுத்தத்திற்கு ஆளான மனோஜ் பாரதிராஜா இன்று நம்மை விட்டு போய்விட்டார். இவருக்கு இரண்டு மகள்கள். இவருடைய மனைவி பெயர் நந்தனா. இவர்களுடைய திருமணம் காதல் திருமணம். தனது காதல் திருமணத்தை பற்றி ஒரு பேட்டியில் மனோஜ் பகிர்ந்தது இப்போது வைரலாகி வருகின்றது.

அதாவது எங்களுடைய காதலுக்கு விலை இரண்டு கோடி என கூறினார் மனோஜ். அதற்கு பின்னணியில் இருக்கும் காரணத்தையும் கூறினார். அதாவது மனோஜ் மற்றும் அவருடைய மனைவி நந்தனா ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் உருவாக இருந்ததாம். அந்த படத்திற்கான மொத்த செலவு இரண்டு கோடியாம். அப்போதுதான் தன் மனைவி நந்தனாவை முதன் முதலில் பார்த்தேன் எனக் கூறினார் மனோஜ்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நீலாங்கரையில் உள்ள மனோஜின் வீட்டில் தான் நடந்திருக்கிறது. அப்போது நந்தனா மனோஜ் வீட்டின் ஹாலில் அமர மனோஜ் மேலிருந்து கீழே நந்தனாவை முதன்முறை பார்த்தாராம் .பார்த்ததுமே இவர்தான் தன்னுடைய மனைவியாக வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அப்படியே படப்பிடிப்பு நடக்க இறுதி கட்ட படப்பிடிப்பில் இருவருக்குமே பிரிய போகிறோம் என்ற எண்ணம் இருந்திருக்கிறது.

அதுவரை தன்னுடைய மனைவி தன்னை காதலிக்கிறார் என அவருக்கு தெரியவில்லை. அது அந்த இறுதி கட்டப்பட பிடிப்பில் தான் தெரிந்ததாம். படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நந்தனா போகும்போது மனோஜை ஒரு முறை திரும்பி பார்த்தாராம். பார்த்ததுமே கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அப்பொழுதுதான் மனோஜுக்கு இவர் தன்னை காதலிக்கிறார் என தெரிந்திருக்கிறது. அதன் பிறகு போனில் நிறைய பேசினார்களாம். மெசேஜ் மூலமாகவும் பேசினார்களாம். அதன் பிறகு தான் எங்களுடைய திருமணம் நடந்தது. ஆனால் அந்த படம் வெளிவரவில்லை என தன்னுடைய திருமணத்தை பற்றி மனோஜ் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story