More
Categories: Cinema News latest news

நக்மாவால தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படமே உருவாச்சு! ஒரிஜினல் ஸ்கிரிப்ட் கேட்டா ஆச்சரியப்படுவீங்க

Actress Nagma:1996 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் உள்ளத்தை அள்ளித்தா. நகைச்சுவையில் வெளியான இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரம்பா நடித்திருப்பார். கூடவே கவுண்டமணி, மணிவண்ணன், ஜெய்கணேஷ், செந்தில், ஜோதி மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கதைப்படி கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்கு தன் வீட்டை விட்டு தப்பிச்செல்லும் ஒரு இளைஞனை சுற்றி இந்த கதை அமைந்திருக்கும். அந்த இளைஞன் பெரிய பணக்கார வீட்டுப் பையன். வீட்டை விட்டு தப்பித்து ஹீரோயின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். அங்கு ஒரு டிரைவராக வேலைக்கு அமர்கிறார். அந்த ஹீரோயின் அப்பா இந்த பணக்கார வீட்டுப் பையனின் அப்பாவுக்கு ஒரு நெருங்கிய தோழர்.

இதையும் படிங்க: மங்காத்தா அஜித்துக்கு டஃப் கொடுக்கும் சிம்பு!.. தக் லைஃப் வீடியோ வெறித்தனம்!…

அது பிறகு தெரிய வர அந்த ஹீரோ எப்படி தன் அப்பாவின் கண்ணெதிரில் படாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறார் என்பதுதான் இந்த கதை. பட முழுக்க நகைச்சுவையை சொட்ட சொட்ட கொடுத்திருப்பார் படத்தின் இயக்குனரான சுந்தர்சி.  சமீபத்தில் தான் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சமீப காலமாக பல youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் சுந்தர் சி உள்ளத்தை அள்ளித்தா படத்தை பற்றிய ஒரு ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார். இந்த படம் உருவாக காரணமே நக்மா தான் என்ற ஒரு புது தகவலை சுந்தர் சி பகிர்ந்து இருக்கிறார். ஏனெனில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தில் நக்மா நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம்.

இதையும் படிங்க: குறி வச்சாச்சு.. வெளியான ‘தக் லைஃப்’ சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! இது வேற ரகம்

ஆனால் படத்தின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் என்னவென்றால் இளையராஜாவின் ட்ரூப்பில் வயலின் வாசிக்கும் ஹீரோயின் அதே ட்ரூப்பில் கோரஸ் பாடும் ஹீரோ. இப்படித்தான் கதை கரு அமைந்திருந்ததாம். நக்மா இந்த படத்தில் வந்தால் எப்படி இளையராஜா ட்ரூப்பில் நக்மாவை வயலின் வாசிக்க வைப்பது?

அதனால் நக்மாவை ஒரு பணக்கார வீட்டு பெண்ணாக காட்டலாம் என சுந்தர் சி நினைத்தாராம். சரி அப்படி இருக்கும்போது ஹீரோ எப்படி கோரஸ் பாடுவார்? அதனால் அவரை ஹீரோயின் விட்டு டிரைவராக மாற்றலாம் என்று தான் அந்த கதை அப்படி அப்படியே மாறி ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டையே மாற்றிவிட்டது என சுந்தர் சி சமீபத்திய பேட்டி ஒன்றை இந்த தகவலை கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: விடாமுயற்சி பட ஹீரோயின் பார்ல அடிக்கிற கூத்தை பாருங்க!.. தொடையழகை காட்டி டார்ச்சர் வேற பண்றாரே!..

Published by
Rohini

Recent Posts