‘வளையோசை கலகல’ பாடல் உருவான விதம்!.. இந்த பிரபலத்திற்காகவே பாட்டெழுதிய வாலி!..
1988 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் தான் ‘சத்யா’. இந்தப் படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அவரின் முதல் படமும் கூட. மேலும் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருந்தார். இவர்களோடு ஜனகராஜ், கிட்டி போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் ஜொலித்திருந்தனர்.
ஒரு வேலையில்லாத பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றிதான் கதை அமைந்திருக்கும். தன்னைச் சுற்றி சமூதாயத்தில் நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் ஒரு ஆண் மகனாக கமல் நடித்திருப்பார். படம் கமெர்ஷியல் வெற்றி அடைந்து 150 நாள்கள் ஓடி சாதனை படைத்தது.
மேலும் இந்தப் படத்தில் வில்லனாக நடித்த கிட்டி என்பவருக்கு இந்தப் படத்திற்கான சிறந்த வில்லன் விருதும் வழங்கப்பட்டது. சத்யா படத்தின் கதை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு படத்தில் அமைந்த அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
அதிலும் குறிப்பாக கமலும் அமலாவுக்கு காதல் ரொமான்ஸை வெளிப்படுத்தும் விதமாக அமைந்த ‘வளையோசை கலகலவென’ பாடல் அனைத்து இளசுகளின் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலாகவே அமைந்தது. படத்திற்கு இசை இளையராஜா.
இந்தப் பாடலுக்கு வரி எழுதியவ கவிஞர் வாலி. இந்தப் பாடல் உருவான விதமே மிகவும் அற்புதமான நிகழ்வாகவே இருந்திருக்கின்றது. அதை ஒரு பேட்டியில் இளையராஜாவே கூறியிருந்தார். அதாவது இந்தப் பாடலின் மெட்டை முதலில் கமல் இளையராஜாவிடம் ஒரு ஆங்கில இசையின் பின்னனியில் கூறியிருக்கிறார்.
அதை இளையாராஜா சற்று வடிவமைத்து வாலியிடம் போட்டுக் காட்டி இதற்கேற்ப வரி இருக்க வேண்டும் என கூறி மேலும் பாடலை பாடப்போவது லதா மங்கேஷ்கர், அதனால் வார்த்தைகள் திரும்ப திரும்ப வந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட வாலி அதாவது இரட்டைக் கிளவியில் வார்த்தைகள் வரவேண்டும் அப்படித்தானே என்று கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : ‘லியோ’வை கூண்டோடு தூக்க ரெட் ஜெயண்ட் போடும் பக்கா ப்ளான்!.. களத்தில் காத்திருக்கும் பெரிய ஆப்பு!..
அப்பொழுது தான் லதா மங்கேஷ்கருக்கும் பாடுவதில் சிரமம் இல்லாமல் இருக்கும் என்பதற்காக இளையராஜா கூறினாராம். அதன் பிறகே கலகலவென, சலசலவென என்று போட்டு வாலி அற்புதமாக இந்தப் பாடலை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். இதை அந்த மேடையில் மிகவும் நெகிழ்ந்து கூறினார் இளையராஜா.