ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கும் ஒரே வில்லன் ரகுவரன்தான்! அவர் இடத்துல இவர வச்சா எப்படி?

Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்படி சொல்லும் போதே ஃபையர் ஆகுற மாதிரி ஒரு உணர்வு அனைவருக்குள்ளும் இருக்கும். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக பதிந்திருக்கிறார். அந்த இடத்திற்கு வேறு யார் வந்தாலும் மக்கள் எளிதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

ஆனால் சமீபகாலமாக திரையுலகில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை பூதாகரமாக கிளம்பியிருக்கிறது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சரத்குமார் கூறியதில் இருந்து ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

இதையும் படிங்க: வாக்கிங்கில் ரசிகர்களுக்கு ரஜினி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! இவ்ளோ விஷயம் நடந்துருக்கா!…

இதற்கிடையில் லியோ படத்தில் அந்த சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதில் நடிகர் லாரன்ஸும் தன்னை மக்கள் சூப்பர் ஸ்டார் என்று சொல்வதில் மிகவும் விருப்பபடுவதாக தெரிகிறது. டைட்டில் கார்டிலேயும் அப்படித்தான் போடப்படுகிறது.

ரஜினியின் ஆஸ்தான சீசனாகவே லாரன்ஸ் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினி - லாரன்ஸ் பற்றி ஒரு பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சில விஷயங்களை கூறினார். அதாவது சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் நடிக்காமல் இருந்திருந்தால் அதுவே ரஜினிக்கு செய்த மிகப்பெரிய உதவியாக இருந்திருக்கும் லாரன்ஸுக்கு.

இதையும் படிங்க: அப்படி போடு… Bullygang-ல் காலியான ஒரு பக்கா விக்கெட்… மிஸ்ஸான பூர்ணிமா..

தேவையில்லாமல் அந்தப் படத்தில் நடித்து முதல் பாகத்தையும் சேர்த்து சமூக வலைதளங்களில் படத்தை இன்றூவரை கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். உண்மையாகவே ரஜினி மீது அன்பு இருந்திருந்தால் அவர் நடித்த கதாபாத்திரத்தை லாரன்ஸ் தொடாமல் இருந்திருக்க வேண்டும்.

இதற்கிடையில் ரஜினி 171 படத்திலும் ரஜினிக்கு வில்லன் லாரன்ஸ்தான். ரஜினியை அடிச்சு கைதட்டல் வாங்கிய ஒரே வில்லன் ரகுவரன் மட்டும்தான். எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்யும் ஒரு திறமையான நடிகர் ரகுவரன்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!

அவர் இருந்த இடத்தில் இப்போது லாரன்ஸ் எனும் போது அதிர்ச்சியை ரசிகர்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். அதுமட்டுமில்லாமல் ரஜினி 171 படத்தில் இரண்டு ரஜினிகளைத்தான் பார்க்கப் போகிறீர்கள். வேடிக்கையாகத்தான் இருக்கப் போகிறது என அந்தப் பத்திரிக்கையாளர் கூறினார்.

 

Related Articles

Next Story