அதிகம் பேசப்பட்ட டாப்10 இந்திய பிரபலங்கள்… கோலிவுட்டில் தளபதிக்கு மட்டும்தான் இடம்…

by Akhilan |   ( Updated:2025-04-01 08:35:40  )
அதிகம் பேசப்பட்ட டாப்10 இந்திய பிரபலங்கள்… கோலிவுட்டில் தளபதிக்கு மட்டும்தான் இடம்…
X

Vijay

Indian Personalities: இந்தியாவில் பிரபலங்கள் லிஸ்ட் என்றாலே நமக்கு தெரிந்த முகம் இருந்தால் ஒரு ஆனந்தம் இருக்கும். அப்படி மார்ச் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட இந்தியன் பிரபலங்கள் குறித்த டாப் 10 லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் தற்போது அடிக்கடி பிரபலங்கள் குறித்த பேச்சு எப்போதுமே வலம் வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் அதிகம் பேசப்பட்ட இந்தியன் பிரபலங்கள் குறித்த டாப் 10 பட்டியல் வெளியாகி இருக்கிறது.

இந்த பட்டியலில் அதிகம் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் முதலிடத்தில் எப்போதும் போல எம் எஸ் தோனி இருக்கிறார். ஐபிஎல் தற்போது தொடங்கி நடந்து வருவதால் தோனி குறித்து அதிகரித்து இருக்கிறது.

இதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். அவரையடுத்து இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். இவர் குறித்த பேச்சு குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இவரை தொடர்ந்து ரோகித் சர்மா இடம் பிடித்துள்ளார்.

Top10

கிரிக்கெட் வீரர்களிலேயே இந்த மூவர் மட்டுமே இருக்கின்றனர். ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் இடம் பிடித்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்களில் தென்னிந்தியாவில் இருந்து முதல் ஐந்து இடத்தில் இருப்பவர் இவர்தான்.

ஆறாவது இடத்தில் தளபதி விஜய் இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து இருக்கும் இவர் தற்போது அரசியல் களத்தில் தொடர்ந்து மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் அவர் குறித்த பேச்சு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இடம்பெற்றுள்ள நடிகர், அரசியல் தலைவர் இவர்தான்.

ஏழாவது இடத்தில் அமித்ஷா மற்றும் எட்டாவது இடத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் இருக்கிறார். ஒன்பது இடத்தில் பிரபல பாலிவுட் சல்மான்கான் இருக்கும் நிலையில் பத்தாவது இடத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இருக்கிறார்.

Next Story