Connect with us
maharaja

Cinema News

இதுதான் ஹிஸ்ட்ரி! தொடர்ந்து சாதனை படைத்து வரும் மகாராஜா.. என்ன மேட்டர் தெரியுமா?

Maharaja Movie: ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக மகாராஜா திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அபிராமி, அனுரக்  காஷ்யப் ,மம்தா மோகன் தாஸ் என பல நடிகர்கள் நடித்து வெளியான ஒரு ஆக்சன் திரில்லர் படம் தான் மகாராஜா.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி அதிக லாபத்தை பெற்ற படமாக மகாராஜா திரைப்படம் அமைந்தது. படத்தில் அமைந்த ஸ்கிரீன் ப்ளே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒவ்வொரு சீனுக்கும் இடையில் இயக்குனர் கொடுத்த ட்விஸ்ட் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. அந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போர் அடிக்காத வகையில் என்றென்றும் கொண்டாடும் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனரான நித்திலன் சாமிநாதன்.

இதையும் படிங்க: விஜயகாந்த் ஏஐக்கு சம்பளம் இத்தனை கோடியா? கையில் இருந்த கவர கவனீச்சீங்களா?

குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் அறிமுகமான நித்திலன் சாமிநாதன் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் காத்திருந்து அதன் பிறகு மகாராஜா திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார். முதலில் இந்த படத்தில் சாந்தனு நடிப்பதாக இருக்க தயாரிப்பாளர்கள் கிடைக்காத பட்சத்தில் மகாராஜா திரைப்படத்தை அப்படியே ஓரங்கட்டி விட்டு அதன் பிறகு தான் குரங்கு பொம்மை திரைப்படத்தை எடுத்தாராம் நித்திலன்.

அதன் பிறகு தான் மகாராஜா படத்தின் ஸ்கிரிப்டில் சில பல மாற்றங்களை செய்து விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் நித்திலன் சாமிநாதன். விஜய் சேதுபதிக்கு இது ஐம்பதாவது திரைப்படம். அதுவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமாக மாறியது. வில்லனாகவே மாஸ் காட்டி வந்த விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மீண்டும் இந்த படத்தின் மூலம் ஜெயித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் பேர சொல்லி ஏமாற்றிய ராவுத்தர்!.. ரஜினி படத்தை மிஸ் பண்ண இயக்குனர்!…

இந்த நிலையில் படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதில் ஒரு புதிய வரலாறை பிடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது மகாராஜா திரைப்படம் .கிட்டதட்ட 18 .6 மில்லியன் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்களாம். இதன் மூலம் மகாராஜா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் அதிகம் பேர் பார்த்த திரைப்படமாக புதிய வரலாறை பிடித்திருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 2024 ஆம் ஆண்டில் மிக சரியான கம்பேக்கை கொடுத்த நடிகராகவும் விஜய் சேதுபதி இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top