நல்லா வரவேண்டிய படம்! – உள்ளே புகுந்து படத்தை கெடுத்த வடிவேலு..
தமிழின் டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. நகைச்சுவையை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் வடிவேலுவை தவிர்த்து சினிமா வரலாற்றை பதிவு செய்யவே முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான ஒரு நடிகராக வடிவேலு இருக்கிறார்.
வடிவேலு நகைச்சுவையில் உச்சத்தில் இருந்த காலத்தில் அவருக்கு நிகராக இன்னொரு நகைச்சுவை நடிகர் இல்லாத அளவிற்கு பல கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார். அதே சமயம் சினிமா சுற்றுவட்டாரத்தில் வடிவேலு குறித்து அதிக எதிர்மறை கருத்துக்களும் உண்டு.
வடிவேலு நிறைய நபர்களை திட்டியுள்ளார். நிறைய பேரை பகைத்துக்கொண்டுள்ளார் என்று சினிவட்டாரத்தில் அவரை குறித்து பேச்சு உண்டு. அதுமட்டுமின்றி அவர் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் கதையை மாற்றி அமைத்தல், நகைச்சுவை காட்சிகளை தனக்கு தகுந்தாற் போல மாற்றி அமைப்பது போன்ற விஷயங்களை இவர் செய்வதுண்டு.
2008 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் இந்திரலோகத்தில் நா.அழகப்பன். இந்த திரைப்படத்தில் வடிவேலு மூன்று வேடங்களில் நடித்திருப்பார். இயக்குனர் தம்பி ராமய்யா இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படத்திற்காக தம்பி ராமய்யா எழுதிய கதையே வேறு என கூறப்படுகிறது. நல்ல ஹிட் கொடுக்கும் வகையிலான ஒரு கதையை அவர் எழுதியுள்ளார். ஆனால் அதை கேட்ட வடிவேலு அந்த கதை ஒத்துவராது என கூறி கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.
அதன் பிறகு வெளியான இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே பிரச்சனையால்தான் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் நின்று போனது.