மாட்டுப் பொங்கலா இல்லை புலி பொங்கலா!.. ஒரே புலி படமா போட்டு சாகடிக்கிறாங்களே!..

puli
Pongal Movies: எந்தவொரு விழாக்களானாலும் அதிகம் பேர் எதிர்பார்ப்பது டிவியில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகும்? என்னென்ன பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகும் என்பதுதான். தியேட்டர், ஓடிடி , இணையதள வசதி இவைகள் எல்லாம் இல்லாத போது மக்கள் டிவி நிகழ்ச்சியை எதிர்பார்த்தே காத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இன்று ஆங்காங்கு இருந்த படி போனிலும் மடிக்கணினியிலும் பிடித்த படங்களை பிடித்த நிகழ்ச்சிகளை கண்டு களித்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் பிரபல டிவி சேனலான கே டிவியில் பொங்கல் அன்று பல திரைப்படங்கள் ஒளிபரப்பாகின்றன.
இதையும் படிங்க: ஹீரோ பெயரை பாடல் வரிகளில் சொருகிய வாலி!.. இதுல செம கில்லாடி அவருதான்!..
ஆனால் அந்த படங்கள் எல்லாமே புலி பெயர்களைக் கொண்ட படங்களாகவே இருக்கின்றன. அதுதான் சுவாரஸ்யம். திட்டமிட்டே ஒளிப்பரப்புகிறார்களா? இல்லையா என்று தெரியவில்லை. இதுவரை இந்த மாதிரி ஒரே பெயரில் அமைந்த படங்கள் மொத்தமாக ஒளிப்பரப்பியதில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஒவ்வொரு படங்களின் ஒளிப்பரப்பாகும் நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் காலை 10 மணிக்கு விஷால் மற்றும் காஜல் நடிப்பில் வெளியான பாயும் புலி ஒளிப்பரப்பாகிறது. அடுத்ததாக மதியம் 1 மணிக்கு பிரச்சன்னா மற்றும் விமல் நடிப்பில் வெளியான புலிவால் ஒளிப்பரப்பாகிறது.
இதையும் படிங்க: வண்டி நிக்காது போலயே! மாரி செல்வராஜ், நெல்சனை அடுத்து ரஜினியின் அடுத்த டார்கெட் இவர்தான்
அதனை அடுத்து மாலை 4 மணிக்கு விஜய் மற்றும் ஹன்சிகா நடிப்பில் வெளியான புலி திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. அதன் பிறகு இரவு 7 மணிக்கு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது. கடைசியாக இரவு 10 மணிக்கு ஜீவா நடிப்பில் சிங்கம் புலி படமும் ஒளிப்பரப்பாகிறது.
ஆக மொத்தம் இந்த வருடம் யாரும் மாட்டுப் பொங்கலை கொண்டாடப்போவதில்லை. புலிப் பொங்கலைத்தான் கொண்டாட இருக்கிறார்கள். ஆனால் இந்த செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் ஏண்டா இந்த வேண்டாத வேலை? எல்லாம் உருப்படாத புலிகள்தான் என கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் ரஜினியை விட உயர்ந்தவர் கேப்டன்தானாம்… எப்படின்னு தெரியுமா?