தமிழில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதை களத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக விக்ரம் இருக்கிறார். சேது திரைப்படத்தில் துவங்கி காசி, பிதாமகன் என்று ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு வகையான புதிய கதாபாத்திரமாக நடித்திருப்பார் விக்ரம்.
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனிப்பட்ட ஒரு நடிப்பை அவர் வெளிப்படுத்துவதை அந்த திரைப்படங்களில் காண முடியும். இதற்கு நடுவே தில், கிங், போன்ற கமர்சியல் கதாபாத்திர கதைகளையும் நடித்தார். அப்படியாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த திரைப்படம் சாமுராய்.
சாமுராய் திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்து போய் அதில் நடித்தார் விக்ரம். ஆனால் அந்த திரைப்படம் அவர்கள் எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை அதனால் இயக்குனர் கவலையில் இருந்தார்.
ஆனால் அதைப் பற்றி விக்ரம் கவலைப்படவில்லை ஏனெனில் விக்ரமிற்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. எனவே அந்த இயக்குனருக்கு இன்னொரு ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் விக்ரம். இதற்காக பாலாஜி சக்திவேலை தனக்கென்று இன்னொரு கதையை எழுத சொன்னார்.
ஆளை மாற்றிய இயக்குனர்:
பாலாஜி சக்திவேலும் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கும், பைக் மெக்கானிக்கிற்கும் ஏற்படும் காதலை மையமாகக் கொண்டு ஒரு கதையை எழுதினார். ஆனால் கதை எழுதி முடித்த பிறகு இந்தக் கதைக்கு விக்ரம் சரியாக இருக்க மாட்டார் என்று இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு தோன்றியது.
எனவே அவர் விக்ரமிடம் சென்று இந்த கதை உங்களுக்கு சரியாக இருக்காது என்று கூறினார். மேலும் அந்த சமயத்தில் சாமி திரைப்படத்தில் விக்ரம் நடித்து வந்தார். எனவே அந்த திரைப்படத்தை அப்பொழுது அறிமுகம் ஆகியிருந்த நடிகர் பரத்தை வைத்து இயக்க முடிவு செய்தார் பாலாஜி சக்திவேல். அந்த திரைப்படம் தான் பிறகு காதல் என்கிற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…