Cinema News
தன் மீதே மண்ணை வாரி போட்டுக்கொண்ட சந்தானம்… எல்லாத்துக்கும் காரணம் யார்ன்னு தெரியுமா?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட சந்தானம், அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்துவைத்து, மிக முக்கிய காமெடி நடிகராக உருவானார். இவரது கவுண்ட்டர் காமெடிகளை இன்றும் ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.
இருப்பினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு சந்தானம், ஹீரோவாக மட்டுமே நடிக்கத் தொடங்கினார். தொடக்க்கத்தில் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்கள் சிலவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும், சமீப காலமாக சந்தானம் கதாநாயகனாக நடித்து வரும் பல திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.
உதாரணத்திற்கு “பிஸ்கோத்”, “குலுகுலு”, “ஏஜெண்ட் கண்ணாயிரம்” போன்ற திரைப்படங்களை கூறலாம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன், சந்தானம் திரைப்படத்தின் தோல்விகளை குறித்து முக்கிய காரணமாக ஒன்றை கூறியுள்ளார்.
“சமீபத்தில் நடந்த விடுதலை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் கூச்சலால் இளையராஜா கடும் கோபத்திற்குள்ளானார். இந்த கூட்டம் எல்லாமே திரட்டப்பட்ட கூட்டம்தான். பல ஊர்களில் இருந்து பிரியாணி பொட்டலத்திற்காகவும் மது பாட்டிலுக்காகவும் இங்கு வந்து கூடிய கூட்டம். அவர்கள் கதாநாயகனின் பெயரை சொன்னாலே கத்துவார்கள். இது போல் தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ள கூட்டத்தை கூட்டி வருபவர்கள் சினிமாவில் நிலைத்து நின்றார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
இவ்வாறுதான் சந்தானம் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்தானத்திற்காக பலரையும் திரட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் அந்த விழா அரங்கின் நுழைவு கதவை உடைத்துவிட்டார்கள். வாங்கிய காசுக்கு அதிகமாக தன்னுடைய விசுவாசத்தை காட்ட வேண்டும் என்று இவ்வாறு செய்துவிட்டார்கள்.
அதே போல் இன்னொரு விழாவில் சந்தானம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு அழைத்திருந்தார். அப்போது ரசிகர்களையும் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார். எந்த கேள்வி கேட்டாலும் அவர்கள் கத்திக்கொண்டே இருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் சிலர் வெளியே போய்விட்டார்கள். இன்றைக்கு சந்தானத்தின் நிலைமையை பாருங்கள். ஒரு வெற்றிக்கொடுக்க திணறுகிறாரா இல்லையா? இது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். ஆனால் சூரி இதனை ஆரம்பத்திலேயே செய்கிறார்” என அந்தணன் அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளையராஜா கோபத்துக்கு சூரிதான் காரணம்?… அப்படி என்ன நடந்தது தெரியுமா?