---Advertisement---

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Published on: April 3, 2026
the mummy 4 release date
---Advertisement---

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து ரசிகர்களைத் திரையரங்குகளில் கட்டிப்போட்ட இந்த திரைப்படத்தின் 4-வது பாகம் குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 1999 மற்றும் 2001-ம் ஆண்டுகளில், ஸ்டீபன் சம்மர்ஸ் இயக்கத்தில் பிரண்டன் ஃப்ரேசர், ரேச்சல் வெய்ஸ் , ஜான் ஹன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘தி மம்மி’ மற்றும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்து உலக அளவில் வசூல் சாதனை படைத்தன. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து வெளியான 3-வது பாகமான ‘தி மம்மி: டோம்ப் ஆஃப் தி டிராகன் எம்பரர்’ முதல் இரண்டு பாகங்கள் போல வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூலில் ஓரளவிற்கு வெற்றியே பெற்றது எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தி மம்மி 4 பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகவுள்ளது. இதில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் இரண்டு பாகங்களில் ஈவ்லின் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து ஸ்கோர் செய்த நடிகை ரேச்சல் வெய்ஸ் மீண்டும் 4-வது பாகத்தில் இணையவுள்ளார்.

கால்ஷீட் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மம்மி 3ம் பாகத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது மம்மி சீரிஸ் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பிரண்டன் ஃப்ரேசர் – ரேச்சல் வெய்ஸ் என ஒரிஜினல் சூப்பர் ஹிட் ஜோடி இணையவுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகவுள்ள தி மம்மி 4 திரைப்படம், வரும் 2028-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.