உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து ரசிகர்களைத் திரையரங்குகளில் கட்டிப்போட்ட இந்த திரைப்படத்தின் 4-வது பாகம் குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த 1999 மற்றும் 2001-ம் ஆண்டுகளில், ஸ்டீபன் சம்மர்ஸ் இயக்கத்தில் பிரண்டன் ஃப்ரேசர், ரேச்சல் வெய்ஸ் , ஜான் ஹன்னா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘தி மம்மி’ மற்றும் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய முதல் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்து உலக அளவில் வசூல் சாதனை படைத்தன. இதனைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து வெளியான 3-வது பாகமான ‘தி மம்மி: டோம்ப் ஆஃப் தி டிராகன் எம்பரர்’ முதல் இரண்டு பாகங்கள் போல வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூலில் ஓரளவிற்கு வெற்றியே பெற்றது எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தி மம்மி 4 பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகவுள்ளது. இதில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக முதல் இரண்டு பாகங்களில் ஈவ்லின் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து ஸ்கோர் செய்த நடிகை ரேச்சல் வெய்ஸ் மீண்டும் 4-வது பாகத்தில் இணையவுள்ளார்.
கால்ஷீட் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் மம்மி 3ம் பாகத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது மம்மி சீரிஸ் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பிரண்டன் ஃப்ரேசர் – ரேச்சல் வெய்ஸ் என ஒரிஜினல் சூப்பர் ஹிட் ஜோடி இணையவுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகவுள்ள தி மம்மி 4 திரைப்படம், வரும் 2028-ம் ஆண்டு, மே மாதம் 19-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…