ARRahman: இசைப்புயல் குடும்பத்தில் 'வீசியது' புயல்... விவாகரத்தை அறிவித்தார் மனைவி!

by sankaran v |   ( Updated:2024-11-19 13:00:18  )
ARR Saira banu
X

ARR Saira banu

உலகளவில் முக்கிய இசையமைப்பாளர் ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தமிழின் தன்னிகரற்ற கலைஞன், பாடகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இசைப்புயல் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரியும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் தற்போது புதிய புயல் வீசியுள்ளது.

29 ஆண்டுகள்

Also read: 300 கோடினா சும்மாவா? தட புடலாக பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்

திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து கணவர் ரஹ்மானை பிரிவதாக அவர் மனைவி சாய்ரா பானு அறிவித்து இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

அடுத்த விவாகரத்து

முன்னதாக அவரது மருமகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மனைவி, நீண்டநாள் காதலி சைந்தவியை பிரிவதாக அறிவித்து புயலை கிளப்பினார். தற்போது அவர்களின் குடும்பத்திலேயே அடுத்த விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

திருமணம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ராபானுவுக்கும் 1995 மார்ச் 12ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரஹீமா, கதீஜா என்ற இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான் தான். தற்போது திடீரென சாய்ரா பானு பிரிவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் இவர்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

29 ஆண்டுகால திருமண உறவு

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரின் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ.ஆர்.ரஹ்மானுடனான 29 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். தனது வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமையையும், புரிதலையும் வேண்டுவதாகவும் சைரா தெரிவித்துள்ளார்.

பிரிவுக்கான காரணம்

ஏ.ஆர்.ரகுமானைப் பிரிந்த மனைவி சாய்ரா பானு பிரிவுக்கான காரணம் குறித்து இப்படி தெரிவித்துள்ளார். தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் பதட்டங்களும், சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story