Connect with us
maharaha

Cinema News

மகாராஜாவுக்கு பிறகு மீண்டும் ஒரு பம்பர் ஆஃபர்.. விஜய்சேதுபதியின் மார்கெட் உச்சத்தை பாருங்க

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. துணை நடிகராக வில்லனாக நடித்து வந்தவர் தென் மேற்கு பருவக்காற்று படம் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் மூலம் தான் ஹீரோவாக முதன் முதலாக அறிமுகமானார். சீனு ராமசாமிதான் இவரை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தவர். அதுமட்டுமில்லாமல் சீனு ராமசாமியுடன் தான் அதிக படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய்சேதுபதி.

அதனாலேயே இருவருக்குமான நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அந்தப் படத்திற்கு பிறகு பீட்சா, ஜிகர்தண்டா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்து மக்கள் ரசிக்கும் நடிகனாக மாறினார் விஜய்சேதுபதி. தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் காமெடித்தனமான நடிப்பையே வெளிப்படுத்தி வந்த விஜய்சேதுபதி ஆக்‌ஷ்னாக மாறிய திரைப்படம் சேதுபதி.

இந்தப் படத்தில் போலீஸாக மாஸான நடிப்பை வெளிப்படுத்தினார். இதற்கு அடுத்து தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்த இவர் பேட்ட திரைப்படத்தின் மூலம் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். அதுவும் ரஜினிக்கு வில்லனாக எனும் போது அவருக்கான மார்கெட் உயர்ந்தது. அதிலிருந்து விஜய், கமல் என மற்ற மொழிகளிலும் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவே நடிக்க ஆரம்பித்தார்.

இப்படியே வில்லத்தனத்தை மட்டுமே காண்பித்தால் வேலைக்கு ஆவாது என மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய திரைப்படம்தான் மகாராஜா. இந்தப் படம் எதிர்பார்க்காத அளவு வெற்றியை பெற்றது. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இந்தப் படத்திற்கு ஆகாச வீரன் என்று பெயரிடப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் வீரா என்ற கேரக்டரிலும் நடித்திருக்கிறாராம் விஜய்சேதுபதி.

pandi

pandi

இந்த நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக சொல்லப்படுகிறது. 22 கோடிக்கு இந்தப் படத்தை அமேசான் வாங்கியிருக்கிறதாம். இதற்கு முன் மகாராஜா திரைப்படம் 18 கோடிக்குத்தான் விற்கப்பட்டதாம். அப்படி பார்க்கும் போது பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top