விஜய்க்கு 275 கோடினா அஜித்துக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அதிலும் ஒரு ரூல்ஸா?
Ajith : ரசிகர்களை பொறுத்தவரைக்கும் நடிகர்களில் யார் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். அதிலும் தன்னுடைய அபிமான நடிகரின் சம்பளத்தை தெரிந்து கொள்ள அவர்கள் காட்டும் ஆர்வம் இருக்கே. அதில் என்னதான் சந்தோஷம் இருக்கிறது என்றே தெரியவில்லை.சமீபகாலமாக விஜயின் சம்பளம் பற்றி ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அவர் அடுத்து நடிக்கப் போகும் தளபதி 69 படத்தில் விஜய் 275 கோடி சம்பளம் வாங்குகிறார் என சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே விஜய்க்கு அந்தப் படத்தில் 186 கோடிதான் சம்பளமாம். அதன் பிறகு ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 210 கோடி என்ற வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: அஜித்தும் அரவிந்த்சாமியும் இந்த விஷயத்தில் ஸ்டிரிக்டா இருக்காங்க! ஃபாலோ பண்ணுங்கப்பா
அதிலும் கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் 150 கோடி என இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அஜித்தின் சம்பளம் பற்றியும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அஜித் தன் சம்பளத்தில் ஒரு அளவுகோல் வைத்திருக்கிறாராம்.
தான் நடிக்கும் ஒரு படம் சேட்டிலைட்டில் எவ்வளவு போகிறதோ அதுதான் தன்னுடைய சம்பளம் என ஃபிக்ஸ் செய்து வைத்திருக்கிறார். குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய இரண்டு படங்களுமே சாட்டிலைட்டில் 150 கோடி வரை விற்றிருக்கிறதாம். இதுதான் அஜித்தின் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ஹிட்டடித்தா சும்மா இருக்க மாட்டாங்களே… கேஜிஎஃப் கதையை கையில் எடுக்கும் தமிழ் சினிமா!..
ஆனால் சாட்டிலைட் வியாபாரம் இப்போது பெரும் பாதாளத்தில் கிடக்கிறது. இனி வரும் படங்கள் சாட்டிலைட்டில் வியாபாரமே நடக்காது. அப்போ அஜித் என்ன சம்பளம் எதிர்பார்ப்பார் என்றும் கேள்வி எழுந்து வருகிறது. அது அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்றவாறு அமையும் என்று கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.
எப்படி இருந்தாலும் சம்பளம் வாங்குகிறவர்களாகட்டும் சம்பளம் கொடுக்கிறவர்களாகட்டும் உண்மையான சம்பளத்தையே சொல்லமாட்டார்கள். அப்படி இருக்கும் போது சோசியல் மீடியாவில் இதை பற்றி பெரிய விவாதமே நடந்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடிக்கும் டாப் ஹீரோ! என்னடா இவருக்கு வந்த சோதனை?
ஆனால் ஒவ்வொரு படங்களின் வெற்றித்தான் அடுத்தடுத்த படங்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும். ஒரு வேளை குட் பேட் அக்லி படம் மாபெரும் வெற்றிப்பெற்றால் அஜித்தின் சம்பளம் 150 கோடியிலிருந்து 200 கோடியாக கூட அதிகரிக்கலாம்.