விஜயோட செல்லப்பெயர் இதுதானா? இத்தன நாள் தெரியாம போச்சே - க்யூட்டா சொல்றாங்களே
Vijay Nick Name: தமிழ் சினிமாவில் விஜய் ஒரு புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார். வசூலிலும் இவரின் படங்கள்தான் சாதனைகளை பெற்று வருகிறது. கிட்டத்தட்ட ரஜினிக்கு இணையாக ஒரு வசூல் சக்கரவர்த்தியாகவே பார்க்க படுகிறார் விஜய்.
ஆரம்பத்தில் தன் அப்பாவின் இயக்கத்தில் நடித்து வந்த விஜயை இந்த சினிமா உலகம் இன்னும் அவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சி மற்ற இயக்குனர்களின் காலில் விழுந்தார். அதன் மூலம் கிடைத்த படம்தான் பூவே உனக்காக திரைப்படம்.
இதையும் படிங்க: இன்னைக்கு 3 மணி நேரத்தில் சோலி முடிஞ்சிடும்!.. விமர்சனத்தை எல்லாம் தடுக்கவே முடியாது.. அமீர் அதிரடி!
விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம் பெருமளவு வெற்றியை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை விஜயால் பெற முடிந்தது. இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவை பெற்றார் விஜய்.
அது இப்போ வரைக்கும் தொடர்ந்து தக்க வைத்திருக்கிறார். விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே மாறிவிட்டது. குறிப்பாக குழந்தைகள் விரும்பும் நடிகராக இருக்கிறார் விஜய். இந்த நிலையில் விஜய்க்கு ஒரு செல்லப் பெயர் இருக்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையும் படிங்க: ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!.. ஷிவானி சும்மா ஜிவ்வுன்னு இழுக்குறாரே!..
ஒரு சமையல் நிகழ்ச்சிக்காக விஜயின் அம்மாவை அழைக்க ஷோபா அந்த நிகழ்ச்சியில் சர்க்கரை பொங்கல் செய்யத் தொடங்கினார். அது விஜய்க்கு மிகவும் பிடித்தமான இனிப்பு உணவாம். இதை அறிந்த தொகுப்பாளர் விஜய்கிட்ட பேச முடியுமா என கேட்க அந்த நிகழ்ச்சியில் இருந்து கொண்டே ஷோபா விஜய்க்கு போன் செய்தார்.
உடனே ஷோபா விஜயை ‘ஜோ எங்கம்மா இருக்க? ஷூட் ல இருக்கியா’ என பேச்சை ஆரம்பித்தார். இதிலிருந்தே விஜயை ஷோபா ஜோசப் விஜய் என்பதை செல்லமாக ஜோ என்று அழைப்பதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: அந்த ஹீரோ நடிக்க வேண்டிய கதையில் நடித்த அஜித்!.. அட இதெல்லாம் நமக்கு தெரியாம போச்சே!..