விஜயகாந்த போல வீரமா இருந்தா செய்வினை வச்சிடுவாங்க சாமி!.. வைரலாகும் வீடியோ..

Published on: July 11, 2023
vijayakanth
---Advertisement---

மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து வாய்ப்பு தேடியவர் விஜயகாந்த். பல போராட்டங்களுக்கும், அவமானத்திற்கும் பின்னரே அவர் நடிகரானார். துவக்கம் முதலே ஆக்‌ஷன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கி பல படங்களில் நடித்தார். சி செண்டர் எனப்படும் நகர மற்றும் கிராமபுறங்களில் இவரின் படங்கள் நல்ல வசூலை பெற்றது. இவருக்கு ரசிகர்களும் உருவானார்கள்.

vijayakanth
vijayakanth

 

ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் ஆகியோரின் படங்களோடு விஜயகாந்தின் படங்கள் வெளியாகி அப்படங்களை விட அதிக வசூல் செய்த சம்பவமும் நடந்தது. விஜயகாந்தின் பல படங்கள் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. அதைவிட, ரஜினி, கமல், சத்தியராஜ், பிரபு ஆகியோரை ஒப்பிட்டால் விஜயகாந்துக்குதான் அவரின் 100வது படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் படிங்க: கிடப்பில் போடப்பட்ட விஜயகாந்த் படம்!.. இது மட்டும் வந்திருந்தா அவர் நிலமையே வேற!..

விஜயகாந்த் என்றால் கணீர் குரலில் அவர் பேசும் வசனம் மற்றும் சண்டை காட்சிகள்தான் ரசிகர்களுக்கு நினைக்கு வரும். அந்த அளவுக்கு அவர் நடிக்கும் படங்களில் வசனம் அனல் பறக்கும். ஆனால், கடந்த சில வருடங்களாகவே விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. பேச முடியவில்லை. தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணர முடியாதவராக அவர் இருக்கிறார். அவருக்கு அப்படி உடலில் என்ன பிரச்சனை என்பதை பிரேமலதாவும் வெளிப்படையாக சொல்லவில்லை.ஒருபக்கம் அவ ருக்கு யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் எனவும் சிலர் கொளுத்தி போட்டனர். சிலர் அதை நம்பவும் செய்கின்றனர்.

Vijayakanth
Vijayakanth

இந்நிலையில், வயதான மூதாட்டி ஒருவர் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தையிடம் அந்த பாட்டி ‘சாமி விஜயகாந்த போல வீரமா இருந்தா உனக்கு செய்வினை செஞ்சிடுவாங்க.. அவர போல இரக்க குணம் இருந்தா உன்ன ஒட்டாண்டி ஆக்கிடுவாங்க.. அப்படி இருக்காத சாமி.. அவர் எப்படி இருந்த மனுஷன்.. அவருக்கு என்னமோ வந்திடுச்சி. நீ உன் பொழப்பு உண்டுன்னு இரு சாமி.. அவர் செஞ்ச தர்மம் தலை காக்கும்’ என அந்த பாட்டி பேசுகிறார்.

இந்த வீடியோவை விஜயகாந்த் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.facebook.com/watch?v=553553922902118

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.