பண நெருக்கடியில் இருந்த எம்ஜிஆர்.. உதவிய மூதாட்டி!.. அவரை அழைத்துக் கொண்டு எங்கு சென்றார் தெரியுமா?..
தமிழக மக்களின் நெஞ்சங்களில் தன் உறவினர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். அவர் ஆற்றிய பணிகள் கொஞ்சநஞ்சமில்லை. அவரை ஒரு தலைவராக தங்களில் ஒருவராக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் எனில் அவர் செய்த அருஞ்செயல்கள் தான் காரணம்.
தன் படங்களின் மூலமும் சரி பாடல்களின் மூலமும் சரி மக்களுக்கு தேவையான கருத்துக்களை தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறிவந்தார் எம்ஜிஆர். அதனாலேயே இவர் படங்களுக்கு பாடல் எழுதும் கவிஞர்கள் ஒரு முறை இவரிடம் அந்த வரிகளை காட்டிவிட்டு தான் படங்களில் சேர்ப்பார்கள்.
இப்படி பல படங்கள் இவரின் பெருமையை பறைசாற்றுவனவாக அமைந்திருக்கின்றன. ஒரு சமயம் உலகம் சுற்று வாலிபன் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்று கொண்டிருந்தாராம் எம்ஜிஆர். அப்போது திடீரென கார் பிரேக் டவுன் ஆக தன்னுடன் வந்திருந்த உதவியாளரிடம் கார் சரி ஆகிற வரைக்கும் பக்கத்தில் இருந்து ஏதாவது சாப்பிட வாங்கி வர சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : நான் சூப்பர்ஸ்டார்… ஆனால் என்னால இதெல்லாம் பண்ணவே முடியாது… வருத்தப்பட்ட ரஜினி…
அந்த கடையில் ஒரு மூதாட்டி இருக்க சாப்பிட தேவையானவற்றை வாங்கிக் கொடுத்தாராம் அந்த உதவியாளர். ஆனால் அது எம்ஜிஆருக்கு என்று அந்த மூதாட்டிக்கு தெரியாதாம். இதே போல் மற்றுமொரு நாளும் இதே மாதிரி வாங்க போன உதவியாளருக்கு ஷாக். கடையில் மூதாட்டி இல்லை. உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தாராம். இருந்தாலும் வீட்டிற்கு போய் மூதாட்டியிடம் அப்போதுதான் எம்ஜிஆர் ஏதாவது வாங்கி வரச்சொன்னார் என்று அந்த மூதாட்டியிடம் சொல்ல உடனே எம்ஜிஆரை பார்க்க அந்த மூதாட்டியே வந்திருக்கிறார்.
இவரின் உடல் நிலையை பார்த்த எம்ஜிஆர் அந்த மூதாட்டிக்கு 500 ரூபாய் கொடுத்தாராம். நாள்கள் போக உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாவதற்கு பண நெருக்கடியில் இருந்தாராம் எம்ஜிஆர். இதை செய்தித்தாளில் அறிந்த அந்த மூதாட்டி தான் சேர்த்து வைத்திருந்த 1800 ரூபாயை ராமாவரம் தோட்டத்திற்கு போய் எம்ஜிஆரை சந்தித்து கொடுத்தாராம்.
இதை பார்த்த எம்ஜிஆரின் கண்கள் கலங்கியதாம். உடனே அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அந்த மூதாட்டியிடம் சொல்லி ரிலீஸுக்கு பிறகு வந்து பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். சொன்ன மாதிரியே ரிலீஸீக்கு பிறகு அந்த மூதாட்டியை சந்தித்து உலகம் சுற்று வாலிபன் படத்தை இருவரும் மணலில் அமர்ந்து பார்த்திருக்கின்றனர். இந்த செய்தி இப்போது இணையத்தில் உலாவருகிறது.