Connect with us
ajith

Cinema News

அஜித் ஜாதகமே என் கையில்! இத பண்ணாதான் ‘விடாமுயற்சி’ தப்பிக்கும்.. பீதி கிளப்பும் ஜோசியர்!..

Vidamuyarchi Movie: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்து வருகிறார். பல பிரபலங்களுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும் இருந்து வருகிறார். கோலிவுட்டில் மற்ற  டாப் நடிகர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அஜித்  சற்று வித்தியாசமானவராகவும் இருக்கிறார்.

அவரின் கொள்கைகளும் வித்தியாசமானது. தற்போது அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இதையும் படிங்க: ரத்தம் படமே நல்லாருக்குதுன்னு சொல்ல வச்சிடாதீங்க விஜய் ஆண்டனி!.. இம்சை பண்ணும் ஹிட்லர் டீசர்!..

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா ஐந்தாவது முறையாக இணைந்து நடிக்கிறார். பொதுவாக அஜித் – த்ரிஷா காம்போ ஒரு ராசியான காம்போவாகவே பார்க்கப்படுகிறது.அதனால் இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் சினிமாவின் போக்கு பற்றியும் டாப் நடிகர்களை பற்றியும் ஜாதக ரீதியாக கூறியிருந்தார். அதில் அஜித்தை பற்றியும் கூறினார். ஏற்கனவே அஜித்தின் ஜாதகத்தை பார்த்து கணித்திருக்கிறாராம் இந்த ஜோதிடர்.

இதையும் படிங்க: விஷ்ணுவை பார்த்து காரித்துப்பும் பூர்ணிமா!.. கமல் போல கண்டுக்காமல் இருக்கும் பிக் பாஸ்.. நடத்துங்க!

அதாவது வெள்ளை நிறத்துடன் இருக்கும் நடிகர்கள் குறிப்பாக அஜித் மிகவும் வரும் ஆண்டில் மேலும் புகழ்பெறுவாராம். அஜித் பெண்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக இருப்பதால் அவருக்கு நேரம் அமோகமாக இருக்கிறதாம்.

குறிப்பாக மார்ச் 7 முதல் ஏப்ரல் 24 க்குள் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸானால் படம் பெரும் வரவேற்பை பெறுமாம். ப்ளாக் பஸ்டர் ஹிட்டடிக்கவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஜோதிடர் கூறினார்.பொதுவாகவே அஜித் செண்டிமெண்டை அதிகம் எதிர்பார்ப்பவர்தான்.

இதையும் படிங்க: திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாததால் மங்கிப்போன நடிகர்கள் – ஒரு பார்வை

வியாழக்கிழமைகளில்தான் தன் படத்தை ரிலீஸ் செய்ய விரும்புவார். படம் ஆக்‌ஷன் படமாகவே இருந்தாலும் அதில் ஒரு சின்ன செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாக வேண்டும் என்று நினைப்பார். ஒரு வேளை இந்த ஜோதிடர் கூறிய விஷயங்கள் அவர் காதுக்கு சென்றால் அதற்கேற்ப ஸ்டெப் எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top