தில் ராஜு பற்ற வைத்த தீ!.. விஜய் நம்பர்.1 ஆக ஒரே வழி!.. பிரபல தயாரிப்பாளர் அறிவுரை.
தமிழ்சினிமாவில் இப்போது தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருப்பது விஜயை நம்பர் 1 என்று தில் ராஜு கூறியது தான். விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் ரஜினி, கமல் இவர்கள் எல்லாம் இருக்கும் போது மிகவும் தில்லாக தில் ராஜு கூறியிருப்பது ரஜினி ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயைய விட அதிக ரசிகர்களை கொண்டவர் ரஜினி. அவருக்கு எப்பேற்பட்ட மாஸ் உள்ளது என்று அனைவரும் அறிந்த ஒன்றே. இது போதாது என்று வாரிசு பட இசை விழாவில் சரத்குமார் விஜயை இவர் தான் சூப்பர் ஸ்டார் என்று பேசியது மேலும் எறியிற தீயில எண்ணெய் ஊத்துன கதையாக மாறிவிட்டது. இதை கேட்டு கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் சரத் வீட்டை முற்றுகையிட்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : கரணம் தப்பினால் மரணம்… வேகமாக வந்த ரயில்… கனநொடியில் தப்பிய நவரச நாயகன்…
இது ஒரு புறம் இருக்க மீண்டும் தில் ராஜு தன் பட வியாபாரத்தை பெருக்க விஜயை மற்ற நடிகர்களுடன் போட்டி போட்டு பாராட்டி வருகிறார். இது ரசிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. ஆனால் இவை எல்லாவற்றையும் பார்த்து விஜய் அமைதி காத்துக் கொண்டு வருகிறார். இந்த பேச்சால் விஜயின் மீது பல எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
சொல்லப்போனால் தமிழக மக்கள் விஜயை நம்பர் 1 இடத்திற்கு ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிகிறது. இதைப் பற்றி கேட்கையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி இவர்கள் காலத்தில் எம்ஜிஆரை நம்பர் 1 இடத்தில் வைத்து பார்த்து ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
அதே போல் ரஜினி, கமல், விஜயகாந்த் காலத்தில் ரஜினியை நம்பர் 1 இடத்தில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் விஜய் அஜித் இவர்களில் விஜயை மட்டும் ஏன் இந்த இடத்தில் வைத்து பார்க்க விரும்பவில்லை எனில் எம்ஜிஆர், ரஜினி போன்றோர் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தனர். இருவருமே மாபெரும் வசூல் சக்கரவர்த்திகளாக திகழ்ந்தனர்.
அதே போல் விஜயும் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மக்கள் இவரையும் நம்பர் 1 இடத்தில் வைத்து அழகு பார்ப்பார்கள் என்று கூறினார். மேலும் சம கால நடிகர்கள் சம வெற்றி தோல்வி படங்களைக் கொடுத்து வரும் நிலையில் தில் ராஜு இப்படி மீண்டும் மீண்டும் விமர்சிப்பது ஏதோ அஜித்திற்கு விஜயிற்கு இடையே பிரிவினை ஏற்படுத்த வழிவகுக்கும் என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.