எங்கயும் நாங்க கில்லி! கோலிவுட்டில் சொல்லி அடிக்கும் பிறமொழி நடிகர்கள்

sam1
ஆரம்பகால சினிமாவை பொருத்தவரைக்கும் அந்தந்த மொழி நடிகர்கள் அந்தந்த மொழி படங்களில் மட்டுமே நடித்து வந்தனர். ஆனால் இப்போது சினிமாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளே வந்த பிறகு முற்றிலுமாக மாறிவிட்டன. அதுவும் ஃபேன் இந்தியா என்ற ஒரு விஷயம் உள்ளே வந்த பிறகு இந்த மொழி பிரச்சனை என்பது இப்போது எந்த மொழி சினிமாவிலும் இல்லாமல் போய்விட்டது.
மற்ற மொழி நடிகர்கள் தமிழ் மொழி சினிமாக்களில் வந்த நடிப்பதும் தமிழ் மொழி நடிகர்கள் மற்ற மொழி சினிமாக்களில் நடிப்பதும் ஒரு சகஜமாகவே மாறிவிட்டன. அந்த வகையில் மற்ற மொழி நடிகர்கள் தமிழ் சினிமாக்களில் நடித்து அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்ட அந்த நடிகர்களை பற்றி தான் இப்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பகத் பாசில்: ஒரு திறமையான நடிகர். தமிழில் வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் முதன்முதலாக தமிழில் நடிக்க வந்தார். சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகமே கொண்டாடிய விக்ரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். சமீபத்தில் கூட உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

fahath
துல்கர் சல்மான் : மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளத்தில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமான துல்கர் சல்மான் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால், ஹே சினாமிகா போன்ற தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மாதவனுக்கு அடுத்தபடியாக பெண் ரசிகைகள் கொண்ட நடிகராக துல்கர் சல்மான் கோலிவுட்டில் வலம் வருகிறார்.
இதையும் படிங்க : ஆசைக்கு ஒரு மகன்.. ஆஸ்திக்கு ஒரு மகனாக வாழ்ந்த அரவிந்த்சாமி! அட இவருக்கு பின்னாடி இப்படி ஒரு ரகசியமா?

dulquer
ராணா டகுபதி : தெலுங்கில் ஒரு முக்கியமான நடிகராக வலம் வரும் ராணா தமிழில் ஆரம்பம் என்ற படத்தில் அஜித்துடன் நடித்தார். அதனைத் தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், என்னை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இவரை ஒரு தெலுங்கு நடிகர் என்று தமிழ் ரசிகர்கள் பார்த்ததில்லை. நம்மூர் நடிகர் என்றுதான் இதுவரை பார்த்து வருகிறார்கள். அதுவும் பாகுபலி படத்தில் இவருடைய நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது.

rana
நானி: தமிழ் மிகவும் பேசத் தெரியாத ஒரு நடிகர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனாலும் நான் ஈ என்ற படத்தில் இவருடைய காட்சிகள் சிறிது நேரம் வந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கொள்ளை கொண்டார். இவருக்கென்று தமிழ் ரசிகர்களின் பட்டாளம் ஏராளமாகவே இருக்கின்றது. நீதானே என் பொன்வசந்தம் ,ஆஹா கல்யாணம், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

nani
சஞ்சய் தத் : இந்த வரிசையில் இப்போது புதியதாக சேர்ந்திருக்கும் நடிகர் பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத். கே ஜி எஃப் இல் ஒரு மிரட்டலான நடிப்பை கொடுத்திருந்தாலும் இப்போது விஜய் நடிப்பில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கே ஜி எஃப் ஒரு ஃபேன் இந்தியா படமாக அமைந்தது. இருந்தாலும் முழுமையான ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்றால் அது இந்த லியோ படம் தான். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தால் இன்னும் வரும் காலங்களில் அவரை ஏராளமான தமிழ் படங்களில் காணலாம்.

sanjay
இதையும் படிங்க : நடிகை ரோஜா போட்ட டான்ஸ்..! – ரீல்ஸ்சே குலுங்கிடுச்சு..!