தமிழ் சினிமா எத்தனை தலைமுறை நடிகர்களைதாண்டி வந்தாலும் எம்.ஜி.ஆரை போல ஒரு கலைஞனை இனிமேல் காண முடியாது. திரையில் ஹீரோவாக ஜெயித்தது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தன்னுடைய பண்புகளினால் ஹீரோவாக மக்கள் மனதில் நின்றவர் எம்.ஜி.ஆர். திரை வாழ்க்கையில் தனக்கென தனி பார்முலா அமைத்து தமிழ் சினிமாவை கட்டிப் போட்டவர். இது பிற்காலத்தில் தமிழ்நாட்டையே ஆளுமை செய்ய காரணமாக அமைந்தது.
எம்.ஜி.ஆர் வறுமையின் பிடியில் வளர்ந்து வந்ததன் காரணமாக ஏழையின் நிலை அவருக்கு புரியும். உதவி என்று தேடி வந்தால் ஓடோடி சென்று அவர்களுக்கு வேண்டியவற்றை செய்து கொடுப்பவர். தேடி வந்தவருக்கு மட்டுமின்றி தன்னுடன் இருப்பவர்களின் நிலை அறிந்து உதவிகளை வாரி வழங்கும் வள்ளலாக இருக்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் படங்களில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. எம்.ஜி.ஆரின் சண்டை காட்சிகள் மக்களிடையே தனி வரவேற்பை பெரும் வகையில் அமைந்திருக்கும்.
அப்படி சண்டைக் காட்சிகளில் நடிக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் நடிப்பார். எதிரிகளைப் பந்தாடும் பொழுது ஒரு அடி கூட அவர்களின் மீது விழாத அளவுக்கு துல்லியமாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் வல்லவர் எம்.ஜி.ஆர். ஒரு முறை ”பெரிய இடத்துப் பெண்” படபிடிப்பின் பொழுது நான்கு முரடர்களுடன் எம்.ஜி.ஆர் சண்டையிடுவது போல் காட்சி படமாக பட்டுக் கொண்டிருக்கிறது. காமாட்சிநாதன் என்ற ஸ்டண்ட் நடிகர் அந்த நான்கு முரடர்களில் ஒருவராக நடித்தார்.
எம்.ஜி.ஆர் கம்பை சுற்றுகையில் காமாட்சி நாதன் பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டார். கம்பை வலது பக்கமாக சுற்றுவதற்கு பதிலாக தவறி இடது பக்கமாக சுற்றிவிட்டார். இப்பொழுது எம்.ஜி.ஆர் எதிர்பாராத விதமாக அவர் முதுகில் பலத்த அடி ஏற்பட்டது. இதனால் வலியால் துடிதுடித்து போனார். சிறிது நேரத்தில் முதுகில் ரத்த கோடு போட்டது போல அவர் அடைந்திருந்த சட்டையின் மீது பளிச்சென்று காணப்பட்டது.
இதைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பதறிப் போனார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் சிரித்தபடியே காமாட்சி நாதனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த சண்டைக்காட்சியில் நடித்து முடித்தார். பின் மருத்துவமனைக்கு சென்று முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற்றார். எம்.ஜி.ஆர் மனிதர்குல மாணிக்கமாக சிறந்து விளங்க இவை போன்றவைகள் காரணங்களாக அமைந்தன.
நேற்று சோசியல்…
தனது தந்தை…
Sun serials:…
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…