Cinema News
பேர்லயே மிரட்டிய சைக்கோ படங்கள்! ஜெயம் ரவிக்கு முன்பே ரசிகர்களை அலறவிட்ட நடிகர்கள்
Pshyco Movies: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பிற மொழி சினிமாவிலும் த்ரில்லர் சார்ந்த கதைகளுக்கு எப்பவுமே ஒரு வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். குடும்ப பாங்கான கதைகளையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு சமீபகாலமாக த்ரில்லர் சப்ஜெக்ட்கள் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று வெளியான இறைவன் படமும் ஒரு த்ரில்லர் கலந்த ஆக்ஷன் படமாகத்தான் அமைந்திருந்தது.
ஆனால் இதே பாணியில் ஜெயம் ரவிக்கு முன்னாடியே அந்த மாதிரியான கதைகளில் நடித்து வரவேற்பை பெற்ற நடிகர்களைத்தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது குத்தமாடா?!.. ரஜினி படத்துக்கு வந்த பெரிய சிக்கல்!..
ராட்சசன்: விஷ்ணுவிஷால் நடிப்பில் 2018ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த படம்தான் ராட்சசன். பட தொடக்கத்தில் இருந்தே சஸ்பென்சாக கதையை கொண்டு போயிருப்பார் இயக்குனர். பல பெண் குழந்தைகளை கடத்தி வந்து கொடூரமாக கொல்லும் ஒரு சைக்கோ கில்லரை பற்றிய கதைதான் இது. 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 50 கோடி வரை லாபத்தை பெற்றுத் தந்தது.
சைக்கோ: உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சைக்கோ. இதில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருப்பார். இந்த படமும் ஒரு சைக்கோ கில்லர் பல பெண்களை கடத்தி வந்து கொடூரமாக கொல்லும் கதையை மையப்படுத்திதான் அமைந்திருக்கும். அந்த சைக்கோ கில்லரை கண் தெரியாத நம் ஹீரோ தன் புத்திசாலித்தனத்தால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் மீதி கதை. ஒவ்வொரு சீனையும் மிஷ்கின் மிரட்டியிருப்பார்.
இதையும் படிங்க: ஒரே கதையில் இரண்டு படங்கள்!. தெருவில் அலையும் இயக்குனர்… அட நம்ம சூர்யாவா இப்படி?..
போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் இந்தாண்டு வெளியான படம் தான் போர்த்தொழில். இதிலும் ஒரு சைக்கோ கில்லர் பெண்களை கடத்தி வேட்டையாடி காட்டுக்குள் வந்து போடுவதை வழக்கமாக கொள்கிறான்.அதை சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் எந்த வகையில் கண்டுப்பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. படம் முழுக்க கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர். இந்தப் படமும் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை பெற்று நீண்ட நாள்கள் ஓடியப் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை!. தோல்வியை கூட அசால்ட்டா தூக்கி போட்ட சச்சு..