Connect with us

Cinema News

அஜித்துக்கு போட்டியா களம் இறங்குறேன்.. பைக்கோடு மாஸ் காட்டிய மஞ்சு வாரியர்!..

1995 ஆம் ஆண்டு வெளிவந்த சாக்‌ஷயம் திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மஞ்சு வாரியர். அதன் பிறகு அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

manju 1

manju 1

1996 ஆம் ஆண்டே மொத்தம் 5 படங்களில் இவர் நடித்தார். அதன் பிறகு 1999 வரை நடித்து வந்த மஞ்சு வாரியர் திடீரென நடிப்பை விட்டு விலகினார். அதன் பிறகு 14 வருடங்கள் கழித்து மீண்டும் 2015 இல் சினிமாவிற்கு வந்தார். முன்பை விட இப்போது அவருக்கு அதிக வரவேற்பு இருந்தது.

manju 2

manju 2

2019 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் தனுஷிற்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்தார். இதனையடுத்து தமிழ் சினிமாவிலும் இவருக்கு ரசிக வட்டாரங்கள் உருவாக துவங்கின. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற துவங்கினார்.

manju 3

manju 3

இந்த நிலையில் இந்த வருடம் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் கண்மணி என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மஞ்சு வாரியர். கிட்டத்தட்ட அஜித்திற்கு ஜோடி கதாபாத்திரமாக இது இருந்தது. இதனையடுத்து இன்னும் 5 படங்களில் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

manju 4

manju 4

சில மாதங்களுக்கு முன்புதான் மஞ்சு வாரியர் ஒரு பி.எம்.டபுள்யு பைக் வாங்கினார். அஜித்தை போலவே இவருக்கும் பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். தற்சமயம் அந்த பைக்கில் அமர்ந்து இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

google news
Continue Reading

More in Cinema News

To Top