குத்துப்பாடலில் காவேரி பிரச்சனையை சொன்ன கவிஞர்... இதைப் போயா கிண்டல் பண்ணுவீங்க!..
பட்டிமன்ற பேச்சாளர்கள் மேடையில் கிண்டல் பண்ணும் பாட்டு தான் இது. ஆனால் அந்தக் கவிஞர் இவ்வளவு விஷயத்தை இந்தப் பாடலில் வைத்துள்ளாரா என்பதைத் தான் பார்க்கப் போகிறோம்.
வில்லு படத்தில் கபிலன் எழுதிய பாடல். வாடா மாப்பிள்ளை வாழைப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா என்று வரிகள் போட்டு இருப்பார். இது என்னடா பாட்டுன்னு சொல்வாங்க. ஆனா இந்தப் பாடலின் உள்ளே உள்ள வரிகள் அருமையாகப் போட்டு இருப்பார்.
நடுவில் வடிவேலு சேட்டை அவரது குரல் பாடலை வெகுவாக ரசிக்க வைக்கும். வாடா மாப்பிள்ளை வாழைப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா ஆடும் சாக்கில சைக்கிள் கேப்புல கிடுக்கிப்பிடி போடலாமா... ன்னு பல்லவியில போட்டுருப்பாரு.
இதையும் படிங்க... குருநாதர் பாலசந்தரை ரஜினிகாந்த் திரைப்பட கல்லூரியில் சந்தித்த முதல் தருணம்… அடடே!
மூக்கு கீழே பல்லே பல்லே முத்தம் கொடு, பல்லே பல்லே கடிச்சிப்புட்டா பல்லே பல்லே கத்தக்கூடாது... முந்தானையில் மூட்டைக்கட்டு, முள்ளுக் குத்தும் ரத்தம் வராதே... எப்படி எப்படி? அப்படி அப்படி? இந்த வரிகளுக்கு அர்த்தம் சொல்லத் தேவையில்லை.
என பல்லவியில் வரிகள் போட்டு இருப்பார். 2 சரணத்திலும் தரமான சம்பவம் பண்ணியிருப்பார்.
மைக்ரோமெடி போடட்டா, பூனை நடை நடக்கட்டா, சோளிகே பீச்சேன்னு ஷோக்கா பாடட்டா இதுக்கு ஆண் என்ன சொல்கிறான் என பாருங்கள். இங்கிலிபீசு வேணாண்டி, இந்தி திணிப்பும் வேணாண்டி, கரகாட்டம் ஆடிக்கிட்டு தமிழில் பாடேன்டி... என அழகாகப் பாடியிருப்பார். அதற்கு விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவே என பெண் பாடுவார். அதற்கு ஆண் பல்லே பல்லே போடுவார்.
2வது சரணத்தில் கம்பரசம் தரட்டுமா, இன்ப ரசம் தரட்டுமா, நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா என பெண் கேட்க, சொன்னதெல்லாம் சந்தோஷம், சொல்லித் தந்தால் சந்தோஷம், காவேரியா நீயும் வந்தால் டபுள் சந்தோஷம் என்று ஆண் பாடி முடித்திருப்பார். அதற்கு தை பொறந்தால் வழி பிறக்கும் பொங்கலுக்கு பரிசம் போடுன்னு அழகாக சொல்லி மாலையை நாயகனுக்கு சூட்டுவார்.
இந்தப் பாட்டு குத்துப்பாட்டாக வந்தால் கூட மக்கள் பிரச்சனையை வைத்து அழகான வரிகளைப் போட்டு இருப்பார் கபிலன். மேற்கண்ட தகவலைப் பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.
விஜய், நயன்தாராவின் கலக்கலான நடனத்தில் வடிவேலு காமெடியுடன் வந்த இந்தப் பாடல் வில்லு படத்தில் இடம்பெறுகிறது. இசை அமைத்தவர் தேவிஸ்ரீபிரசாத்.