உருகி உருகி காதலித்த கவின்... Tissue பேப்பர் மாதிரி துடைச்சு போட்டு சென்ற பிரபல ஹீரோயின்!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல ஹீரோக்களில் ஒருவரான கவின் சினிமா பேக்ரவுண்டு இல்லாமல் படிப்படியாக முன்னேறி இன்று ஒரு நலன் நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் தொலைக்காட்சி நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கெரியரை துவங்கி அதன் மூலம் நடிப்பில் கவனம் செலுத்தினார்.
கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட கவின் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சரவணன் மீனாட்சி தொடர் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான சின்னத்திரை நடிகராக பார்க்கப்பட்டார் கவின். அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகளை தேடி பிடித்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இதையும் படிங்க: 5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா 500 ரூபாய்க்கு நடிக்கும் 5 க்ரிஞ்சு நடிகைகள்!.. அடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி!..
அதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் என்பவர் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த கையேடு கவினுக்கு கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கவின், நான் தொலைக்காட்சியில் வேலை செய்து வந்தபோது என்னுடன் வேலை செய்த ஒரு பெண்ணை 3 வருடமாக காதலித்து வந்தேன். ஆனால் அந்த பெண் என்னை பிரிந்து சென்றுவிட்டார் என பெயர் குறிப்பிடாமல் கூறினார்.
உடனே மீடியாக்கள் அந்த பெண் நடிகை பிரியா பவானி ஷங்கர் தான் என கூறியது. ஆனால், அது சுத்த பொய்... ஏனென்றால் பிரியா பவானி ஷங்கர் கல்லூரி படிக்கும் போதில் இருந்தே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். எனவே இதற்கிடையில் எப்படி கவினை காதலிக்க முடியும்? என்று இந்த விஷயத்தை குறித்து யூடியூபில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளரும், சினிமா விமர்சகருமான வித்தகன் சேகர்.
இதையும் படிங்க: உருகி உருகி காதலித்த கவின்… எல்லாம் முடிந்ததும் Tissue பேப்பர் மாதிரி துடைச்சு போட்டு சென்ற பிரபல ஹீரோயின்!