சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே எழுந்த பிரச்சனை… அப்போ வெந்து தணிந்தது காடு 2 அவ்வளவுதானா??
“விண்ணைத்தாண்டி வருவாயா”, “அச்சம் என்பது மடமையடா” போன்ற திரைப்படங்களுக்கு பிறகு சிம்பு, கௌதம் மேனனுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”. இத்திரைப்படத்தில் சிம்புவின் யதார்த்த நடிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
20 வயது இளைஞனாக தனது உடலை உருக்கி ஒரு கிராமத்து அப்பாவி வாலிபனாகவே வாழ்ந்திருந்தார் சிம்பு. இத்திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் இத்திரைப்படத்திற்கு வெற்றி விழா எல்லாம் கொண்டாடப்பட்டது.
“வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வெளிவரும்போதே இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. எனினும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எந்த அறிவிப்பும் இது வரை வெளிவரவில்லை. ஆதலால் “வெந்து தணிந்தது காடு 2” திரைப்படத்தின் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சிம்புவுக்கும் கௌதம் மேனனுக்கும் இடையே தற்போது மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாம். ஆதலால் இனி கௌதம் மேனன் திரைப்படங்களில் தான் நடிக்கப்போவதில்லை என்று சிம்பு முடிவெடுத்துள்ளாராம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவருகிறது.
சில நாட்களுக்கு முன்பு “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கௌதம் மேனன் உருவாக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை பார்த்தால் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கே வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய த்ரிஷா!… இதெல்லாம் ஒரு காரணமா சொன்னா எப்படி?