More
Categories: Cinema History Cinema News latest news

முரளிக்குப் பிரச்சனையே சேர்க்கை சரியில்லாதது தான்… பிரபலம் சொல்லும் தகவல்

நடிகர் முரளி என்றாலே நமக்கு அவரது அமைதியான முகம் தான் நினைவுக்கு வரும். இதயம் படத்து முரளி. கடைசி வரை கல்லூரி மாணவனுக்கே உரிய சாயலில் இருந்தார்.

மனுஷனுக்கு வயசு ஆன மாதிரியே தெரியாது. இவரைப் பற்றி நடிகர் பாவா லெட்சுமணன் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… சட்டு புட்டுனு வேலைய ஆரம்பிங்க! சமாதான புறாவை பறக்கவிட்ட லைக்கா.. ரெடியான அஜித்

முரளி தங்கமான மனுஷன். அவரைப் பார்க்கப் போனா சாப்பிட வச்சித்தான் அனுப்புவார். ‘ஆனந்தம்’ படத்துக்கு 6 மணின்னா 5.45க்கு எல்லாம் ரெடியாகி விடுவார். முதல்ல அவரு நேரத்துக்கு வரமாட்டார்னு பேச்சு வந்தது. அதுக்குக் காரணம் சேர்க்கை சரியில்ல. மேனேஜரும் சரியில்லை.

பெண்களோடு தொடர்பு இருந்தது உண்மை தான். அப்புறம் படிப்படியா குறைச்சிக்கிட்டாரு. பிள்ளைகள் வளர வளர எல்லாப் பழக்கத்தையும் கட் பண்ணிட்டாரு என்கிறார் நடிகர் பாவா லட்சுமணன்.

மதுரைல நான் ஒரு கண்ணாடி கடைல வேலை பார்த்தேன். அங்க பாய் ஒருத்தர் பேசுற ஸ்டைலே வித்தியாசமா இருக்கும். அவரை மாதிரி பேசிப் பார்ப்பேன். அதை ஒரு தடவை டைரக்டர் சசி சார் பார்த்துட்டு ‘சொல்லாமலே’ படத்துல கிளைமாக்ஸ் சீன்ல என்னைப் டப்பிங் பேச வைத்தார்.

அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு ‘மாயி’ படத்துல வடிவேலுவுடன் இணைந்த ‘வாம்மா மின்னல்’ டயலாக்கைப் பேசுனேன். அந்தக் காமெடி வடிவேலுவோடு. அவர் சின்ன பையனா இருந்தாரு.

இதையும் படிங்க… இந்தியன் 2 டிரெய்லர் அப்டேட்..! கமலைப் பற்றி ரஜினி இப்படி சொல்லலாமா..?!

அதனால சரத்குமார் மாதிரி மீசை வச்சி அவரே மாதிரி சட்டை எல்லாம் போட்டு ரெடியா இருந்தேன். வடிவேலு ‘ஓகே’ சொல்லிட்டாரு. அவரு அன்னைக்கு ஓகே சொன்னதால தான் இன்னைக்கு வரைக்கும் கஞ்சி குடிச்சிக்கிட்டு இருக்கேன் என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பாவா லட்சுமணன்.

 

Published by
sankaran v

Recent Posts