தனுஷை எதிர்க்கிறாரா அனிருத்?.. கவின் படத்தை ஒப்புக்கொண்டதன் பின்னனி சம்பவம்!..
தமிழ் சினிமாவில் இசையில் பெரும் சாதனை படைத்த ஏஆர்.ரகுமானுக்கு பிறகு
அடுத்த கட்டத்திற்கு வருபவர் அனிருத். தற்போது ஏஆர்.ரகுமான் தமிழில் பணியாற்றும் வாய்ப்புகள் மிகக்குறைவு. அந்த இடத்தை அனிருத் நிரப்பி வருகிறார்.
ரகுமான் உலகம் முழுவதும் தனது இசையை பரப்ப ஒரு குறிக்கோளுடன் சென்று கொண்டிருக்கிறார். அதன் காரணமாகவே தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக அனிருத் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவரை சினிமாவிற்குள் கொண்டு வந்ததே தனுஷ் தான்.
ஒரு நண்பர், உறவினர் என்ற முறையில் சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தனுஷ். ஆனால் சமீபகாலமாக தனுஷுக்கு அனிருத்திற்கும் ஏதோ சொல்லமுடியாத பிரச்சினைகள் இருப்பதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
ஆனால் தான் அறிமுகப்படுத்திய அனிருத் தனக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என
தனுஷ் நினைப்பது மட்டும் உண்மை என்றும் அதே சமயம் அனிருத்தின் வளர்ச்சி இப்பொழுது எப்பேற்பட்ட நிலையை எட்டியுள்ளது ? அதன் பிறகும் தனுஷுக்கு அடிமையாகவே எப்படி இருக்க முடியும் என்று கருதி கூட அனிருத் கொஞ்சம் கொஞ்சமாக விலகியிருக்கலாம் என்றும் செய்யாறு பாலு கூறினார்.
அதோடு ஒரே சமயத்தில் தனுஷின் புதிய படத்திற்கும் நடிகர் கவின் படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு வர தனுஷ் படத்தை மறுத்திருக்கிறாராம் அனிருத். இதை பற்றி செய்யாறு பாலு கூறிய போது தனுஷ் ஏற்கெனவே வளர்ந்த ஒரு ஹீரோ,
ஆனால் கவின் வளர்ந்து வரும் ஹீரோ, ஒரு வேளை அனிருத்தின் இசையின் மூலமாகவாவது கவினின் படம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது, அதன் மூலம் அனிருத்தின் இசை இன்னும் பெரிய அளவில் பேசப்படலாம் என்று கருதி கூட அனிருத் தனுஷை ஒதுக்கியிருக்கலாம் என்று அவர் கூறினார்.